Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 : புதிதாக ஆறு சம்பவங்கள்!

Sep 02, 2020


நாட்டில் புதிதாக ஆறு COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 4 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

புதிய சம்பவங்களில் இரண்டு, சிலாங்கூர் MV Glen Cluster தொடர்புடையது; 

மற்றொன்று பகாங்கில் வேலையிடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அத்தகவலை தெரிவித்துள்ளார்.

இன்னும் 153 பேர் அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே, ஜொகூரும், பினாங்கும் COVID-19 கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக விடுப்பட்டுள்ளன.

மற்றொரு நிலவரத்தில், COVID-19 cluster-கள் உருவாகி இன்னும் அதில் இருந்து முழுமையாக மீளாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சபாவுக்கு நுழைய அனுமதி இல்லை.

அம்மாநிலத்தில் COVID-19 பரவலை தடுக்க அந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

நேற்று Lahad Datu-வில் புதிய cluster அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வெளிநாட்டில் இருந்து சரவாக் திரும்பும் அம்மாநிலத்தவர்களுக்கான கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளும் செலுவுகளை மாநில அரசாங்கம் ஏற்கும்.

மற்றவர்கள், அச்செலுவுகளை சொந்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தற்காப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

தீபகற்பம், சபா மற்றும் Labuan-னில் இருந்து சரவாக் பயணிப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்த தேவையில்லை.

ஆனால், அவர்கள், சரவாக் சென்று சேர்ந்ததும் இணையம் வாயிலாக சுகாதாரப் பாரம் ஒன்றை நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

RMCO நீட்டிப்பு வரவேற்கக் கூடிய ஒன்று!

இவ்வேளையில்,  நாட்டில் தினசரி பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அத்தொற்றும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

இந்நிலைமையைக் கையாளும் வகையில் மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முடிவு சிறந்ததே என்கிறார் சுகாதார அமைச்சின் நோய் கட்டுப்பாட்டு பிரிவு மூத்த துணை தலைமை இயக்குனர் Dr Vikneshwaran Muthu.

அண்மைய காலமாக நாட்டில் பதிவாகும் COVID-19 சம்பவங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டில் தொற்று பீடித்தவர்களையே உட்படுத்தி இருப்பதை Dr Vikneshwaran சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டிய RMCO, இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த வாரம் பிரதமர் அறிவித்தது தொடர்பில் அவர் கருத்துரைத்தார்
 

Lim Guan Eng பயணிக்க தடை இல்லை!

ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள், சபாவுக்குள் நுழைய முடியாது என எந்தவொரு சட்டத் திட்டங்களையும் அம்மாநில அரசாங்கம் கொண்டிருக்கவில்லை!

மாறாக, சபா மக்களிடையே குழப்பத்தையும், பிளவுகளையும் ஏற்படுத்த முயலும் தரப்பினர் அங்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநில அரசு கூறியுள்ளது.

நேற்று, முன்னாள் நிதி அமைச்சர் Lim Guan Eng, Kota Kinabalu விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அது பேசியது.

எனினும், அதன் தொடர்பில் கருத்துரைத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம், அச்சம்பவம் நிகழ தொழில்நுட்பக் கோளாறுகள் காரணம் என கூறியிருந்தது.

அதோடு உள்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க  Guan Eng-கிற்கு எந்த தடையும் இல்லை என தெளிவுப்படுத்தியிருக்கின்றது.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather