← Back to list
அல்லும் பகலும் போராடும் முன்வரிசைப் பணியாளர்களை மதிப்போம்!
Aug 31, 2020
பரிவுமிக்க மலேசியா எனும் கருப்பொருளோடு இன்றுக் கொண்டாட்டப்படும் 63ஆவது தேசிய தினத்தை ஒட்டி, சுகாதார துறை தலைமை இயக்குநர் மருத்துவத் துறை முன்வரிசைப் பணியாளர்களை பாரட்டி, வாழ்த்தி அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கடந்த 9 மாதங்களாக, நாட்டில் COVID-19 பெருந்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அயராமல் உழைத்து வரும் அவர்களது அர்பணிப்புக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என Tan Sri Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியிருக்கின்றார்.
"This is the time for us to pause for a minute to appreciate all our healthcare workers, especially the frontliners and unsung heroes behind the scenes who have been contributing effortlessly to bring the country to peace, and to combat the COVID-19 infection in this country"
இவ்வேளையில், முன்வரிசைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும், சிறப்பு காணொளியை, Astro வானொலி செய்தி Facebook மற்றும் Twitter பக்கங்களில் நீங்கள் காணலாம்.
பரிவோடு இருங்கள்!
பரிவுமிக்க மலேசியா என்ற கருப்பொருளோடு இன்றைய 63ஆவது தேசிய தினக் கொண்டாடப்படுகின்றது.
இவ்வேளையில், மலேசியர்கள் அந்தப் பண்பை எப்பொழுதும் கடைப்பிடித்து சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என, பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தமது தேசியத் தின வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டார்.
COVID-19 குறித்த தகவல்கள்....
நாட்டில் புதிதாக, 17 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் இரு சம்பவங்கள் மட்டுமே உள்நாட்டில் பரவியவை என சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
இவ்வேளையில், சிலாங்கூர் மற்றும் கெடாவை உட்படுத்தி இரு புதிய cluster-களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பிறகு அத்தொற்றை உட்படுத்தி மரணம் நிகழ்ந்திருக்கிறது; இதையடுத்து மரண எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.
நேற்று பத்து பேர் அப்பெருந்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த வேளை, இன்னும் 160 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மற்றொரு நிலவரத்தில், Shah Alam-மில் உள்ள ஆரம்பப் பள்ளியொன்றைச் சேர்ந்த மாணவருக்கு COVID-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அம்மாணவர் மீதான 2ஆவது COVID-19 பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில கல்வித் துறை கூறியுள்ளது.
அம்மாணவருடைய இரு சகோதரர்களுக்கும் அத்தொற்றி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அத்துறை தெரிவித்தது.
இதையடுத்து, அம்மாணவர்களை உட்படுத்திய இருப் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அத்துறை கூறியது.
அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா!
இந்தியாவில் ஒரே நாளில் 78 ஆயிரத்திற்கும் அதிகமான COVID-19 புதிய சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
உலகிலேயே ஒரு நாளில் பதிவான மிக அதிகமான எண்ணிக்கையாக அது கருதப்படுகின்றது.
இதற்கு முன், ஜூலை 17ஆம் தேதி, அமெரிக்காவில் ஒரே நாளில் பதிவான 77 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா சம்பவங்களை, அவ்வெண்ணிக்கை மிஞ்சியுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், ஆஸ்திரேலியாவில், ஆக அதிகமாக ஒரே நாளில் 41 COVID-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
புதிதாக 73 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு, மொத்த எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather