Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விதிமுறை மீறிய மத்திய அமைச்சர்! சுகாதார அமைச்சிடம் தெரிவிக்கப்படவில்லை!

Aug 26, 2020


கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறையை மீறி சர்ச்சையில் சிக்கியுள்ள தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் துறை அமைச்சர் Datuk Mohd Khairuddin Aman Razali, கடந்த மாதம் துருக்கி சென்று வந்த விவகாரம் பற்றி, சுகாதார அமைச்சிடம் தெரிவிக்கப்படவில்லை!

அவர்  SOP-யை மீறிய தகவல் ஊடகங்கள் வெளியிட்டப் பின்னரே அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர்  
Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.

"we were not informed, we've only been informed last week and what we did the first thing is to instruct internal investigation and yesterday only i got the report. so it is very important for our frontliners, whatever happened at the ground level to inform us or inform the superior so that action can be taken asap." 

அவ்விவகாரம் தற்போது காவல் துறை விசாரணையில் இருப்பதாகவும் Dr Noor Hisham கூறினார்.
 
முன்னதாக, அமைச்சர் ஒருவரே விதிமுறை மீறியும், அவருக்கு வெறும் ஆயிரம் ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது நியாயமாக இல்லை எனக் கூறி பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், Datuk Mohd Khairuddin-னை Bukit Aman இன்று விசாரணைக்கு அழைத்திருக்கிறது.

அபராதம் அதிகரிக்கப்பட வேண்டும்!

தொற்று நோய் சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதத்தை ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து 10 ஆயிரம் ரிங்கிட் வரை உயர்த்துமாறு, சுகாதார அமைச்சு, அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது.

அப்பரிந்துரை நாடாளுமன்றத்திடம் சமர்பிக்கப்பட்டிருப்பதாக Dr Noor Hisham சொன்னார்.
 

புதிதாக பதிவான ஐந்து சம்பவங்கள் Tawar cluster தொடர்புடையவை!

நாட்டில் புதிதாக பதிவான 11 COVID-19 சம்பவங்களில் ஐந்து, Tawar cluster-ஐ உட்படுத்தியிருக்கின்றன.

அவை அனைத்தும் பள்ளி மாணவர்கள் தொடர்புடையது என Tan Sri Dr Noorhisham Abdullah கூறியிருக்கின்றார்.

அம்மாணவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

நாட்டில் இன்னும் 189 பேர் அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 

SP Bala: சிகிச்சையில் நல்ல முன்னேற்றம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக, அவரது மகன் SPB Charan, சமூக வலைத்தள காணொளி வாயிலாக தெரிவித்துள்ளார்.

SP Bala மயக்க நிலையில் இருந்து, 90 விழுக்காடு மீண்டிருப்பதாகவும், அவர், சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், Charan கூறியுள்ளார்.

74 வயதாகும் SP Bala, கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather