← Back to list
சிலாங்கூரில் புதிய வழமையுடன் தேசிய தின கொண்டாட்டம்!
Aug 21, 2020
வரலாற்றில் முதல் முறையாக இவ்வாண்டு நம் நாட்டின் தேசிய தின கொண்டாட்டம் சற்று எளிமையாகவே இருக்கப் போகின்றது!
ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினத்தை வானவேடிக்கை, அணிவகுப்பு, தேசிய தின வரவேற்பு கொண்டாட்டம் என ஆரவாரப்படுத்தும் நாட்டு மக்களுக்கு, இவ்வாண்டு Covid-19 வில்லனாகிவிட்டது.
வழக்கமாக நடக்கும் தேசிய அளவிலான பேரணியில் கூட இவ்வாண்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சுகாதார அச்சுறுத்தலுக்கு இடமின்றி நடைபெறவிருப்பதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே.
வானவேடிக்கை, வரவேற்பு கொண்டாட்டம் இல்லாத ஒரு தேசிய தினமா?
தேசிய அளவிலான கொண்டாட்டங்களுக்கே அப்படி என்றால், மாநில அளவிலான கொண்டாட்டங்களின் நிலை என்ன?
அது குறித்து சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் வி. கணபதி ராவ்-விடம் நாங்கள் கேட்ட போது, ''சிலாங்கூரில் இவ்வாண்டு தேசிய தினத்தை ஒட்டி, மக்கள் கூடுகின்ற விழாக்களுக்கு இடமில்லை'' என அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
நடப்பு நிலவரப்படி நாட்டு மக்கள் தங்களை Covid-19னிலிருந்து பாதுகாத்துக் கொண்டாலே அது நாட்டிற்கு அவர்கள் அளிக்கும் அளப்பரிய பங்கு என்றாரவர்.
அதற்கென்று இவ்வாண்டின் தேசிய தினம் வெரிச்சோடி போய்விடுமா என்ற அச்சம் வேண்டாம்.
மக்களுக்காகவே Online நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கணபதி ராவ் தெரிவித்தார். தேசிய தின கொண்டாட்டத்திற்கு எவ்வித குறையுமின்றி, சமய நிகழ்வுகள், மந்திரி பெசாரின் உரை என அத்தனை நிகழ்வுகளையும் பொது மக்கள் 31ஆம் தேதி ஆகஸ்டு மாதம், SelangotTV அகப்பக்கத்தில் கண்டு களிக்கலாம் என அவர் சொன்னார்.
''சரி, என் நாட்டின் சுதந்திர தினத்தை நான் எவ்வாறு கொண்டாடுவது? என் தேச பக்தியை எவ்வாறு காட்டுவது?'' என்ற பொது மக்களின் வினவலுக்கும் கணபதி ராவ் பதில் வைத்துள்ளார்.
'' உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள், அதுவே நீங்கள் காட்டும் மிகப்பெரிய தேச பக்தி'' என்றாரவர்.
வீடுகளில் வழக்கம் போல தேசிய கொடிகளைப் பறக்க விடுவது, அக்கம் பக்கம் வாழும் பல்லின மக்களுடன் புதிய வழமையுடன், அதாவது தனிமனித இடைவெளியுடன் பேசி சிரித்து மகிழ்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
வழக்கமாக நடைபெறும் தேசிய தின வரவேற்பு கொண்டாட்டம், அணி வகுப்பு, வானவேடிக்கை போன்றவை ஏராளமான மக்களை உட்படுத்தியது என்பதால், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை நடத்துவதில்லை என மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இதனை பொது மக்கள் புரிந்து நடந்து கொள்வர் என தாம் நம்புவதாகவும் V. கணபதி ராவ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மக்கள் மட்டுமின்றி, அனைத்து மலேசியர்களும், சுத்தத்தை பேணுவது, கூட்ட நெரிசலில் சுவாசக் கவசம் அணிவது, கிருமிநாசினி திரவத்தை அவ்வப்போது பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை எப்போதும் நினைவில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
எனவே மலேசியர்களே! தேசிய தினத்தை அனுசரிக்க Covid-19 ஒரு தடையல்ல; எவ்விதத்திலும் நமது தேச பக்தியை நோய்க்கிருமி பாதிக்காது.
இவ்வாண்டு தேசிய தினத்தை புதிய வழமையுடன், பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம்!
அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துக்கள்!
- திவ்யா வேகன் ஜோன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather