← Back to list
"பாடும் நிலா"-வின் உடல் ஆரோக்கியத்தில் சொல்லும்படியான முன்னேற்றம் இல்லை!
Aug 21, 2020
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில், சொல்லும்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை என, அவரது மகன் SPB Charan, ஆகக் கடைசியாக பதிவிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.
Image: The Indian Express
இருந்தாலும், அவர் உடல் நலமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தனது தந்தை உடல் நலம் பெற வேண்டி தொடர்ந்து பிரார்த்தித்து வரும் அனைத்துத் தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
COVID-19: பரிசோதனையை அதிகரித்தது இந்தியா!
உலகிலேயே 2ஆவது மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தியாவில், ஒரு நாளில் COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை 9 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அத்தொற்றுக்கு ஆளாகியிருப்பதை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சமாக உயர்ந்துள்ளது.
உயர்கல்விக் கழகங்களுக்கான மாணவர் நுழைவு ஒத்தி வைக்கப்படலாம்!
கெடா மற்றும் சரவாக்கில் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தால், அக்டோபர் மாதம் உயர்கல்வி கழகங்களுக்கான மாணவர் நுழைவு ஒத்தி வைக்கப்படலாம்!
அந்த நுழைவு புதிதாக பல்கலைக்கழங்களில் சேர வேண்டிய மாணவர்களையும் உட்படுத்தியிருப்பதாக, உயர்கல்வி அமைச்சு கூறியுள்ளது.
சுகாதார அமைச்சு, தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களின் ஆலோசனைக்கு ஏற்ப அதற்கான முடிவு எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்தது.
அக்டோபர் மாதம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் மீதான முடிவு, அந்தந்த மாநிலங்களில் COVID-19 நிலவரத்தைப் பொறுத்தே அமையும் என்றும் அமைச்சு கூறியது.
இவ்வேளையில், நாட்டில் புதிதாக ஐந்து COVID-19 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன.
எனினும், ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பிறகு, முதன் முறையாக உள்ளூரில் பரவியதாக எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்று மேலும் ஏழுப் பேர் அப்பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
இன்னும் 183 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather