Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 கையாள்வதில் தாமதமா? மறுத்தார் MB!

Aug 18, 2020


கெடாவில், COVID-19 பரவலை கையாள்வதில் மாநில அரசாங்கம் தாமதமாக செயல்படுவதாக சில தரப்பினரின் குறைக்கூறல்களை மாநில Menteri Besar மறுத்துள்ளார்.

அப்பெருந்தொற்றுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அம்மாநிலத்தை உட்படுத்தி இதுவரை சிவகங்கை, Tawar, Muda, Sala ஆகிய 4 cluster-கள் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நாட்டில் புதிதாக பதிவான 12 COVID-19 சம்பவங்களில், 10  உள்நாட்டில் பரவியதாகும்; 

அந்த உள்நாட்டுச் சம்பவங்களில் ஏழு, Tawar cluster-ரை உட்படுத்தியிருக்கின்றது; 2 சம்பவங்கள் Sala cluster-ருடன் தொடர்புடையவை.

நாட்டில் இன்னும் 211 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அபராதம் குறித்த விவாதம்!


சுவாசக் கவசம் அணியும் விதிமுறையை மீறுபவர்களுக்கும், கட்டம் கட்டமாக அபராதம் விதிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என, சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

நேற்று மக்களவையில் கொண்டு வரப்பட்ட அவசரத் தீர்மானத்தை அடுத்து, அந்த அபராத தொகை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, 250 ரிங்கிட்டில் இருந்து தொடங்கும் அபராதத்தை நடைமுறைப்படுத்த, சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என Bandar Kuching MP Dr Kelvin Yii கேட்டுக் கொண்டார்.

"apa yang saya cadangkan adalah undang undang haruslah berpatutan dan satu kompaun yang lebih saksama, munasabah dan lebih bertimbang rasa. Jadi sistem ini bagi saya memang lebih saksama terutamanya jika melibatkan orang miskin, orang yang terkesan akibat ekonomi dan mungkin ada orang yang make an honest mistake" 

சில நாடுகளில், அந்த அபாரத் தொகை, அவர்களது குறைந்தப்பட்ச சம்பளத்துடன் ஒப்பிடுகையில் 10 விழுக்காடு குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டிய Dr Kelvin, மலேசியாவில் அது 83 விழுக்காடு வரை இருப்பதாக கூறினார்.

நடப்பில் உள்ள ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகை, வசதிக் குறைந்தவர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் B40-யைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு நியாயமாக இல்லை என Dr Kelvin முன்னதாக கூறியிருந்தார்.

சுவாசக் கவச விற்பனை மோசடி!

மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்த போது, சுவாசக் கவச விற்பனை மோசடி மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்ததாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

இணையம் வழி மேற்கொள்ளப்பட்ட அம்மோசடியால், 18 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டதாக அமைச்சு தெரிவித்தது,

அவற்றில் சில சம்பவங்கள், வெளிநாட்டு மோசடி கும்பல்களை உட்படுத்தியிருந்ததாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
 

MySejahtera செயலி!


MySejahtera செயலி, பயனர்களின் வசதிக்காக மேம்படுத்தப்பட்டிருக்கின்றது!

இதையடுத்து, பேரங்காடிகள் மற்றும் கடைகளுக்குச் செல்வோர், தனித் தனியாக அல்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்தையே ஒரே நேரத்தில் பதிவுச் செய்யும் வசதி அந்த செயலியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் வழி, வணிக வளாகங்களுக்குள் நுழைவோர், கட்டாயமாக தங்களைப் பதிந்துக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த முடியும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

பயனர்கள், அந்த மேம்படுத்தப்பட்ட செயலியில், தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பதிந்துக் கொண்டு, அதனைப் பயன்படுத்த தொடங்கலாம் என அவர் கூறினார்.

தேர்தலை நடத்தும் முடிவில் மாற்றமில்லை!

சபா மாநில சட்டமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள போதிலும், தேர்தலை நடத்தும் முடிவில் மாற்றமில்லை என SPR கூறுகிறது!

அவ்விவகாரம் தொடர்பில், நீதிமன்றத்திடம் இருந்து தங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறியது.

ஆக, அறிவிக்கப்பட்ட படி செப்டம்பர் 26 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என SPR கூறியது; வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும்.

ஜூலை 30ஆம் தேதி சபா சட்டமன்றத்தை கலைத்த மாநில ஆளுநரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அவ்வழக்கை, நீதிமன்றம் விசாரிக்க முடியுமா இல்லையா என்பது மீதான தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கின்றது.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather