← Back to list
26 செப்டம்பர்; சபா சட்டமன்ற தேர்தல்!
Aug 17, 2020
சபா மாநில சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 26 ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும்.
செப்டம்பர் 22 ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பு நடத்தப்படும் என SPR தெரிவித்தது.
இத்தேர்தலில் அஞ்சல் வழி வாக்களிப்பு இருக்காது.
இவ்வேளையில், நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவு கிடைக்காத பட்சத்தில், தேர்தல் ஆணையம் சபா சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து நடத்தும் என Dr. Azmi குறிப்பிட்டார்.
முன்னதாக சபா சட்டமன்றத்தை அம்மாநில ஆளுனர் சட்ட மன்றத்தைக் கலைத்த முடிவை விசாரிக்க முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியுமா இல்லையா என்பது தொடர்பில் இம்மாதம் 21 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சபாவில் அரசியல் நெருக்கடி வெடித்ததை அடுத்து முதலமைச்சர் Datuk Seri Mohd Shafie Apdal ஆலோசனையின் பேரில் திடீர் தேர்தலுக்கு வழிவிட ஏதுவாக மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்தார்.
சபா சட்டமன்றம் ஜூலை 30 ஆம் தேதி கலைக்கப்பட்டது.
______
KLலில் மூன்றாண்டுகளுக்கு முன் சமயப் பள்ளியொன்றில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் 21 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் உயிரிழந்ததற்குக் காரணமானவர் என கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பதின்ம வயது சிறுவன் குற்றவாளியே என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அந்த பதின்ம வயது சிறுவன் அச்சமயப் பள்ளியின் வேலிக்குள் நுழைந்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டது.
அதனை அடுத்து அச்சிறுவனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அச்சிறுவனின் வயதைக் கருத்தில் கொண்டு மாமன்னர் அனுமதிக்கும் காலம் வரை சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.
______
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 12 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அவற்றில் பத்து உள்நாட்டில் பரவியதாகும்.
உள்நாட்டில் பரவிய பத்து சம்பவங்களில் ஏழு, கெடாவில் Tawar cluster சம்பந்தப்பட்டவை; இரண்டு Sala cluster தொடர்புடையவை.
மேலும் 17 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
புதிதாக மரணம் ஏதும் பதிவாகாததால், மரண எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது.
_______
இணையம் வாயிலாக நிகழ்ந்த சுவாசக் கவச விற்பனை மோசடிகளால் ஒரு கோடியே 80 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சு கூறியிருக்கிறது.
மோசடிகளைத் தடுக்க PDRM, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம், நிதிக் கழகங்கள் ஆகியவற்றை உட்படுத்திய சிறப்புப் பணிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
_______
பினாங்கில் வருகையாளர்களின் விவரங்கள், உடல் வெப்பத்தை பதிவு செய்யாதது உள்ளிட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றாத மூன்று சுய சேவை சலவைக் கடைகளை ஏழு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
_______
தங்களது மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் இணைந்திருப்பதாகக் கூறப்படுவதை ஜொகூர் மாநில Bersatu மறுத்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather