← Back to list
பிரதமருக்கு நன்றி! மலேசிய இளையோர் மன்றம் மகிழ்ச்சி!
Aug 17, 2020
இளைஞர் ஒருவர் செனட்டராக நியமிக்கப்பட வேண்டும் என்ற, மலேசிய இளையோர் மன்றத்தின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது!
அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அம்மன்றத்தின் தலைவர் Jufitri Joha, தனதுஎதிர்பார்ப்பையும் முன்வைத்தார்.
Presiden MBM Encik Jufitri Joha
"lebih baik jika calon itu bebas daripada sebarang poltik kepartian agar dapat membawa suara dan aspirasi tulen belia Malaysia tanpa mengira kaum dan agama kefahaman politik, keseimbangan gender dan juga melangkaui geografi semenanjung, Sabah dan Sarawak"
முன்னதாக, மலேசிய இளைஞர்களை பிரநிதித்து ஒருவர் செனட்டராக நியமிக்கப்பட வேண்டும் என அம்மன்றம் முன் வைத்த பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக, கடந்த சனிக்கிழமை ஜொகூரில் நடைபெற்ற தேசிய நிலையிலான இளையோர் தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்தார்.
இளையோரின் குரலும், கருத்துகளும், அரசாங்க நிலையிலான அனைத்து சூழ்நிலைகளிலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதை இந்த செனட்டர் நியமனம் உறுதிச் செய்யும் என பிரதமர் கூறியிருந்தார்.
சபா அரசியல் நிலவரம்!
சபா அரசியல் நிலவரம் இன்று மலேசியர்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளது.
அம்மாநிலத்தில் விரைவில் நடைபெறப்போகும் தேர்தல் தொடர்பில் இரு முக்கிய சம்பவங்கள் அமைந்துள்ளன.
கடந்த ஜூலை 30ஆம் தேதி, மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக, சபா மாநில ஆளுநர் அறிவித்த முடிவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், ஆளுநரின் முடிவு செல்லுமா, செல்லாதா என்பதை நீதிமன்றம் நிர்ணயிக்கவிருக்கின்றது
இவ்வேளையில், மாநில தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் இன்று சிறப்புச் சந்திப்பை நடத்தவுள்ளது.
சபாவில் புதிய ஆட்சி அமைக்க தனக்கு எளிய பெருன்பான்மை இருப்பதாக மாநில முன்னாள் முதலமைச்சர் Tan Sri Musa Aman முன்னதாக கூறிக் கொண்டதை அடுத்து, அங்கு அரசியல் நெருக்கடி வெடித்தது.
இதையடுத்து முதல் அமைச்சர் Datuk Seri Mohd Shafie Apdal ஆலோசணையின் பேரில் திடீர் தேர்தலுக்கு வழிவிட ஏதுவாக மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்தார்.
COVID-19 நிலவரம்!
KL- லில் உணவகத் தொழிலாளர்களான இரு அந்நிய நாட்டவர்களுக்கு COVID-19 பீடித்திருக்கும் தகவலை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக, அந்த உணவகம் மூடப்பட்ட அறிவிக்கை சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
நாட்டில் புதிதாக 25 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, அதில் 9 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும்.
அந்த 9 சம்பவங்களில் ஆறு சம்பவங்கள் Tawar cluster-ரை உட்படுத்தியது என சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
Tawar cluster-ரின் கீழ், கெடா, பினாங்கு மற்றும் பேராக்கில் குறைந்தது தொள்ளாயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
நாட்டில் இன்னும் 216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வேளையில், சுவாசக் கவசம் அணியாததால், ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டவர்கள், அத்தண்டத்தை குறைக்க கோரி மேல் முறையீடு செய்யலாம்.
எனவே, அந்த அபராதத்தை குறைக்க, 1988 நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை என தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
B40-யைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்களுக்கு அந்த அபராதத் தொகை அதிகம் என்பதால், அது குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன.
உடல் நலம் தேறி வருகிறார் SP பாலா!
COVID-19 தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் SPB சரண் தெரிவித்துள்ளார்.
Image: India Today
ஆகக் கடைசி நிலவரப்படி, மருத்துவர்களை அடையாளம் கண்டு, அவர்களை நோக்கி அவர் கைகளை நன்கு அசைப்பதுடன், சற்று சிரமமின்றி சுவாசிப்பதாகவும் சரண் கூறியுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather