Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹெரிஸ்!

Aug 12, 2020


ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் Joe Biden, தனது துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி செனட்டர், Kamala Harris-சை அறிவித்துள்ளார்.

55 வயது கமலா, இந்திய ஜமைக்கப் பெற்றோருக்குப் பிறந்தவராவாரார். 

நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், நடப்பு அதிபர் Donald Trump-பை எதிர்த்து Joe Biden களமிறங்குகிறார்.

இதரச் செய்திகள்...

FOMCA வரவேற்பு!

3 ply சுவாசக் கவசத்தின் விலையை தலா ஒரு ரிங்கிட்டுக்கு குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை, மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் FOMCA வரவேற்றுள்ளது.

இதன் வழி, இன்னும் அதிகமானோர் சுவாசக் கவசத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என FOMCA துணைத் தலைவர் Mohd Yusof Abdul Rahman கூறியுள்ளார்.

"Ini dapat membolehkan rakyat membeli pelitup muka pada kadar yang lebih murah kerana pelitup muka itu perlu digunakan pada setiap hari dan perlu diganti setiap hari. oleh sebab itu dengan menurunkan harga pelitup muka ini dapat meringankan beban kepada rakyat."

எனினும், இந்த புதிய விலை எப்போது அமுலுக்கு வரும் என்பதை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.

நாட்டில் புதிதாக 9 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; மேலும் ஆறு பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

முந்திக் கொண்ட Putin!

ஏறக்குறைய இரு மாதங்களாக மனிதர்கள் மீதானப் பரிசோதனைக்குப் பிறகு, COVID-19 பெருந்தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா அங்கீகரித்திருப்பதாக, அந்நாட்டு அதிபர் Vladimir Putin கூறிக் கொண்டிருக்கின்றார்.

என்றாலும், அத்தடுப்பூசி Putin மகள் உட்பட இதுவரை 76 பேர் மீது மட்டுமே பரிசோதிக்கப்பட்டிருப்பதால், அதன் இறுதிக் கட்டப் பரிசோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இன்னும் பேரளவில் பயன்படுத்தப்படாத ரஷ்யாவின் இத்தடுப்பூசி எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதியாக கூற முடியவில்லை;

நிலைமை இவ்வாறிருக்க Putin உலக சுகாதார நிறுவனத்தை முந்திக் கொண்டு இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது தேவையற்றது என அறிவியல் ஆராச்சியாளர்கள் சாடியிருக்கின்றனர்.

தண்டனையை அதிகரிக்கக் கோரி மேல்முறையீடு!

SRC International வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்து முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak-கிற்கு KL உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையை அதிகரிக்கக் கோரி தேசிய சட்டத் துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.


 கடந்த மாதம், நம்பிக்கை மோசடி, பணச்சலவை, அதிகார முறைகேடு உள்ளிட்ட நஜீப் மீதான ஏழுக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

தம்மீதான அத்தீர்ப்பு மற்றும் தண்டனையை எதிர்த்து நஜீப் மேல்முறையீடு செய்கிறார்.

நிலைநிறுத்தப்படும்!

மலேசியாவில் தடை செய்யப்பட்ட தமிழீல விடுதலைப் புலிகள் அமைப்பு LTTE, தீவிரவாத கும்பல் பட்டியலில் நிலைநிறுத்தப்படும் என உள்துறை அமைச்சு கூறியிருக்கின்றது.

2009ஆம் ஆண்டில் இருந்து அந்த அமைப்பு செயலற்றுப் போயிருந்தாலும், இந்தியா, கனடா, பிரிட்டன், அமெரிக்காப் போன்ற நாடுகளைப் பின்பற்றி, மலேசியாவிலும் அது தொடர்ந்து தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் நீடிக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Akshay Kumar ஆறாவது இடம்!

FORBES சஞ்சிகை வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான உலகில் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் வரிசையில், பிரபல Bollywood நட்சத்திரம் Akshay Kumar ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அப்பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒன்றைப் பிடித்த ஒரே இந்திய நட்சத்திரமாகவும் அவர் திகழ்கின்றார்.

அவரது வருமானம் 48. 5 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather