Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

3 ply சுவாசக் கவசம் சிறந்தது! 

Aug 11, 2020


COVID-19 பரவலைத் தடுக்க, சுவாசக் கவசத்தைப் போன்று face shield-டுகள் உதவும் என்பது மருத்துவ ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இருந்தாலும், ஒன்றுமே உபயோகப்படுத்தாமல் இருப்பதைக் காட்டிலும், face shield-டை அணிவது எவ்வளவோ மேல் என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.

"Boleh digunakan face shield iaitu menutup, tetapi kita tak ada bukti-bukti clinical yang mengatakan ia dapat mencegah tapi sekurang-kurangnya kita ada perlindungan mengunakan face shields tersebut. dan untuk face mask kita telah ada bukti, kalau kita mengunakan face mask kita dapt memutuskan jangkitan penularan covid-19 iaitu lebih kurang 60-65 percent."

COVID-19-னுக்கு எதிராக 3 ply வகை சுவாசக் கவசங்கள் சிறந்தப் பாதுகாப்பை அளிக்கின்றன என்பதால், அதனைப் பயன்படுத்துமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் புதிதாக 11 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, இன்னும் 166 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மற்றொரு நிலவரத்தில், கெடா சிவகங்கை Cluster சம்பவங்களை இன்னும் ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த முடியும் என, Dr Noor Hisham கூறியுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வாயிலாக அந்த cluster-ருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

உணவகம் திறக்கப்படாது!

சிவகங்கை cluster உருவாக காரணமாக இருந்த Napoh-விலுள்ள உணவகம் ஒன்று மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது!

அந்த உணவகம் உடனடியாக மூடப்பட்டு விட்டதாக கூறிய மாநில Menteri Besar Muhammad Sanusi Md Nor, ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை TEMCO முடிந்தப் பிறகு, அந்த உணவகம் மீதான மேல் நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.

இதனிடையே, TEMCO அமுலில் உள்ள பகுதிகளில் மூவாயிரத்து 400 பேர் மீது COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.

“Penduduk yang telah mengikuti saringan diberi gelang pink, gelang ini bermaksud mereka tidak dibenarkan keluar daripada rumah dan ketua keluarga diberi gelang putih iaitu ketua keluarga dibenarkan keluar mendapatkan bekalan makanan di sekitar Kawasan tersebut”

இந்த இக்கட்டான காலக்கட்டத்தை கடந்துச் செல்வதில், மாநில மக்கள் பொறுமையை கடைப்பிடித்து, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள SOP-களை முறையாக பின்பற்றுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் நேற்று COVID-19 கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களை காட்டிலும், அதில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

நேற்று, ஐயாயிரத்து 900யிரத்திற்கும் அதிகமானோருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது; ஆனால், அத்தொற்றில் இருந்து ஆறாயிரத்திற்கும் அதிகமானோர்  முழுமையாக குணமடைந்தனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருந்து வருகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில்தான் கொரோனாவுக்கு தமிழகத்தைவிட அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதரச் செய்திகள்....

குற்றச்சாட்டுகளை மறுத்தார் Zahid!

KL உயர்நீதிமன்றத்தில், சிறு திருத்தங்களுடன் தமக்கெதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை மோசடி தொடர்பான 12 குற்றச்சாட்டுகளை, அம்னோத் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi மறுத்துள்ளார்.

திருத்தப்பட்ட மேலும் இரு ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

அறவாரியம் ஒன்றுக்குச் சொந்தமான 31 மில்லியன் ரிங்கிட் நிதியை அக்குற்றச்சாட்டுகள் உட்படுத்தியிருக்கின்றன.

மலையேறிவர்கள் கைது!

சிலாங்கூர் Semenyih-வில், பொது மக்களுக்கு மூடப்பட்டுள்ள Broga மலையை ஏறிய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக, அவர்களில் பெரும்பாலானோருக்கும் ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
 

பதவி விலகல்!

Lebanon தலைநகர் Beirut-டில் ஏறக்குறைய 160 பேர் உயிரிழக்கக் காரணமான வெடிச்சம்பவத்தை அடுத்து, அந்நாட்டு பிரதமரும் அவர் தம் அமைச்சரவைப் உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather