← Back to list
சிவகங்கை clusterரில் புதிய சம்பவம் இல்லை!
Aug 10, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 11 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் ஆறு உள்நாட்டில் பரவியதாகும்.
மேலும் 19 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
166 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரண எண்ணிக்கையில் மாற்றமில்லை.
மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகும்.
பள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசங்களுக்கு பதிலாக face shield எனும் முகக் கவசத்தைப் பயன்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனைத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு வேளை அதனை உபயோகிக்க அனுமதி கிடைத்தால், மாணவர்கள் அடிக்கடி சுவாசக் கவசங்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என அவர் சொன்னார்.
"Face shield ni, beli sekali tak perlu tukar hari hari. Harga saya difahamkan hanya 3,4 ringgit je dan hari hari boleh balik, cuci je. Besok boleh pakai lagi. mungkin 2,3,4 bulan boleh pakai sekali beli sahaja"
பள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசம் அணிய தற்போதைக்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதனைக் கட்டாயமாக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 222 பேர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
அவர்களில் 49 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்; ஐவர் காவல் துறையின் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டனர்; 168 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
பெர்லிசில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள Kampung Kuala Sanglangங்கிலும் Kampung Tanah Timbulலிலும் உள்ள மக்களுக்கு போதுமான உணவு கையிருப்பு இருப்பதாக மாநில அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
நேற்று முன் தினம் தொடங்கி அங்கு உணவு கையிருப்பு விநியோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட Sanglang சட்ட மன்ற உறுப்பினர், இனி 3 நாட்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமையும் புதன்கிழமையும் அவ்வறு செய்யப்படும் என சொன்னார்.
இதனிடையே அவ்விரு கிராமங்களையும் சேர்ந்த மக்களுக்கு Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Tuan Mohamad Shukri Ramli தெரிவித்தார்.
அவ்விரு கிராமங்களிலும் இன்று முதல் இம்மாதம் 31 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் Covid-19 கிருமித் தொற்றுப் பரவல் தீவிரமாகக் காணப்படும் பகுதிகளில் இருந்து வரும் அல்லது அங்கு செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மக்களவை சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
அக்கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather