← Back to list
கேரளாவில் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்த விமானம்!
Aug 08, 2020
சிவகங்கை cluster: COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை 43ஆக அதிகரித்தன!
கெடா, சிவகங்கை cluster தொடர்பில் இதுவரைப் பதிவான COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில், 31 சம்பவங்கள் கெடாவிலும், 11 சம்பவங்கள் பெர்லீசிலும் மேலும் ஒரு சம்பவம் பினாங்கிலும் பதிவாகியுள்ளது.
நேற்று நாட்டில் புதிதாக பதிவான 25 COVID-19 சம்பவங்களில், 16 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும்.
அந்த 16 சம்பவங்களில், 12 சிவகங்கை cluster தொடர்புடையது என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்னும் 210 பேர் அக்கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
நேற்று மேலும் 15 பேர் அப்பெருந்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.
பள்ளி மாணவர்களும் சுவாசக் கவசம் அணிய வேண்டும்!
COVID19 பரவலைத் தடுக்க, பள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என, மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கம் பரிந்துரைத்திருக்கின்றது.
2 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளும், அதாவது பள்ளி மாணவர்களும் சுவாசக் கவசம் அணிய வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியிருக்கின்றது.
பள்ளிகளில் உணவு உண்ணும் நேரம், வக்குப்பறைகளில் உள்ள நேரம் ஆகியவற்றை தவிர்த்த மற்ற நேரங்களில் மாணவர்கள் சுவாசக் கவசம் அணிய வேண்டும் என அச்சங்கம் கூறியுள்ளது.
குவான் எங் மனைவி மீது குற்றச்சாட்டு!
முன்னாள் நிதியமைச்சர் Lim Guan Eng-கின் மனைவி Betty Chew மீது, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பினாங்கு Butterworth Sessions நீதிமன்றத்தில் பணச்சலைவை குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!
அவ்விவகாரம் தனியார் ஆலோசக நிறுவனமொன்றை உட்படுத்தியது என, அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
முன்னதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட Betty, 50 ஆயிரம் ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டதையும் அவ்வழக்கறிஞர் உறுதிப்படுத்தியிருந்தார்.
Lebanon-னுக்கு மலேசியா உதவும்!
Beirut துறைமுகத்தை உலுக்கிய வெடிச்சம்பவத்தை அடுத்து, மலேசியா Lebanon-னுக்கு வேண்டிய உதவிகள் வழங்கும் என வெளியுறவு அமைச்சு கூறியிருக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து ஆராயுமாறு Wisma Putra கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக, அமைச்சு தெரிவித்தது.
அவ்வெடிப்பில் குறைந்தது 135 பேர் பலியான வேளை, ஐயாயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர்; பலரை இன்னும் காணவில்லை.
கேரளாவில் அடுத்தடுத்து சோகம்!
COVID-19 பெருந்தொற்று சீற்றம் இன்னும் தணியாத நிலையில், தென்னிந்திய மாநிலம் கேரளாவில் நிகழ்ந்துள்ள விமான விபத்து உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
கொரோனாவைரஸ் பரவலை அடுத்து துபாயில் சிக்கியுள்ளவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் ஈடுப்பட்டிருந்ததாக கூறப்படும் அந்த Air India Express விமானம், நேற்றிரவு கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கியப் போது விபத்துக்குள்ளானது.
கனமழைக்கு மத்தியில் அவ்விமானம் இருமுறை தரையிறங்க முயற்சித்ததாகவும், கடைசியில் அது ஓடுபாதையை விட்டு விலகி, பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள், விமானப் பணியாளர்கள் என ஏறக்குறைய 191 பேரை அவ்விமானம் ஏற்றியிருந்த நிலையில், குறைந்தது 17 பேர் அவ்விபத்தில் பலியாகியிருக்கின்றனர்; நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அவ்விபத்து குறித்த விசாரணையை உள்நாட்டு விமானப்போக்குவரத்துறை தொடக்கியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு, கர்நாடகாவின் மங்களூருவில், இதேபோல் துபாயில் இருந்து வந்த பயணிகள் விமானம், ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில், 158 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
கேராளாவில் நிலச்சரிவு!
இவ்வேளையில், கேரளாவில் கனமழையை அடுத்து வெள்ளக்காடாக மாறியுள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர்; அவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என நம்பப்படுகிறது.
அப்பகுதியில், தேடல் - மீட்புப் பணிகள் தொடருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பெருவெள்ளம், நிலச்சரிவு மற்றும் விமான விபத்து என அடுத்தடுத்த சம்பவங்கள் உலுக்கியிருப்பது கடும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather