Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வேகமாக பரவும் சிவகங்கை Cluster!

Aug 07, 2020


கெடாவில் சிவகங்கை cluster, படுவேகத்தில் பரவக்க கூடிய 'super-spreader' தன்மைக் கொண்டதாக இருக்கலாம் என, சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.

நாட்டில் சரவாக் உட்பட இதர 9 cluster-களைக் காட்டிலும், இந்த சிவகங்கை cluster மிக வேகமாக பரவுவதாக அவர் சொன்னார்.

நாட்டில் நேற்று 15 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, அவற்றில் ஆறு சம்பவங்கள் சிவகங்கை cluster-ரை உட்படுத்தியிருக்கின்றது.

மேலும் 11 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்த வேளை, இன்னும் 200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 

ஆசிரியர்களால் முடியும்! NUTP நம்பிக்கை!

மற்றொரு நிலவரத்தில், சிவகங்கை cluster-ரை அடுத்து கெடாவில், மீண்டும் வீட்டில் இருந்தபடியே கற்றல் - கற்பித்தலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ள பள்ளி ஆசிரியர்கள், அதில் எந்தப் பிரச்னையையும் எதிர்நோக்க மாட்டார்கள் என்றே, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP நம்புகின்றது.

கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதிச் செய்ய ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களது உயர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவார்கள் என்றும் NUTP தலைவர்  Aminuddin Awang நம்பிக்கை தெரிவித்தார்.


இந்தியா நிலவரம்!

இந்தியாவில், COVID-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு 20 லட்சத்தை கடந்த இரண்டு நாடுகளாக இதுவரை அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை தான் இருந்தன.

அந்த வரிசையில் மூன்றாவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. 

இதரச் செய்திகள்......

லிம் குவான் எங் கைது!

6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் தொடர்பில், முன்னாள் நிதி அமைச்சர்  Lim Guan Eng கைது செய்யபட்டிருப்பதை, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் MACC உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அந்த Bagan MP மீது இன்று KL நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே விவகாரம் தொடர்பில், அடுத்த வாரம் திங்கட்கிழமை பினாங்கிலுள்ள Sessions நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஷாமுடினுக்கு அபராதம்!

மக்களவையில் vape புகைத்ததற்காக, வெளியுறவு அமைச்சர் Datuk Seri Hishamuddin Hussein-னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது தவற்றை உணர்ந்து,  அச்செயலுக்காக மன்னிப்புக் கேட்ட அவர், அந்த அபராதத்தை செலுத்தவிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
 

சர்ச்சைக்குரிய ஆவணப் படம்: அறிக்கை அனுப்பட்டது!

மலேசியா குறித்து, அனைத்துலக செய்தி நிறுவனமொன்று வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய ஆவணப் படம் தொடர்பான விசாரணை அறிக்கை, மேல் நடவடிக்கைக்காக தேசிய சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆவணப் படத்தில் பேட்டியளித்துள்ள வங்காளதேச ஆடவர் குறித்த தகவல்களும் அந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக Bukit Aman தெரிவித்தது.
 

தாக்கப்பட்ட நேப்பாள பாதுகாவலர் கைது!

அண்மையில் KL Wangsa Maju-வில் தாக்கப்பட்டட நேப்பாள பாதுகாவலர் ஒருவர், இந்தோனிசியப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக, காவல் துறையை மேற்கோள் காட்டி Malay Mail தகவல் வெளியிட்டிருக்கின்றது.

இதன் காரணமாகவே அப்பாதுகாவலரை, அவரது மேலாளர் என நம்பப்படும் மற்றொரு நேப்பாள ஆடவர் முன்னதாக தாக்க காரணம் என்றும் காவல் துறை நம்புகிறது; அந்த மேலாளரும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தண்ணீர் விநியோகத் தடை!

Petaling மாவட்டத்தில், நீர்குழாய் உடைந்ததை அடுத்து, ஏறக்குறைய 50 பகுதிகளில் அட்டவணையிடப்படாத தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, Air Selangor நிறுவனம் தெரிவித்தது.

நீர் விநியோகம் இன்று மாலை ஆறு மணி வாக்கில் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், Taman OUG, Taman Tan Yew Lai, Taman Kinrara, Seputeh, Pantai Dalam, Kerinchi ஆகியவை அடங்கும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather