← Back to list
Covid-19: மீண்டும் ஈரிலக்கத்தில் பதிவான சம்பவங்கள்!
Aug 05, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 21 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் ஆறு உள்நாட்டில் பரவியதாகும்; அந்த ஆறு சம்பவங்களில் மூன்று கெடா, சிவகங்கை cluster தொடர்புடையவை.
மேலும் 18 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரண எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது.
Covid-19 பரவலால் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளவர்களில் குறிப்பிட்ட தரப்பினர் வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் காலத்தை நீட்டிக்க உடனடியாக தத்தம் வங்களுக்குச் செல்ல ஆலோசனை கூறப்படுகிறது.
இறுதி நேரத்தில் விண்ணப்பங்களை முன் வைக்க வேண்டாம் என இரண்டாவது துணை நிதியமைச்சர் Mohd Shahar Abdullah கேட்டுக் கொண்டார்.
அச்சலுகை வழக்கப்பட்ட குறிப்பிட்ட தரப்பினர் இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கி சலுகையை நீட்டிக்க விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
பள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசத்தை அணிவது கட்டாயமாக்கப்படும் பட்சத்தில், அதனைத் தாங்கள் வரவேற்பதாக தேசிய பெற்றோர்-ஆசிரியர் சங்க நல்லிணக்க மன்றம் கூறியிருக்கிறது.
நீண்ட நேரம் சுவாசக் கவசம் அணிந்திருப்பது மாணவர்களுக்குச் சிரமமாக இருந்தாலும், மாணவர்கள் கிருமிப் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதிச் செய்ய அது அவசியம் என அம்மன்றம் வலியுறுத்தியது.
அதோடு பள்ளி நிர்வாகங்கள் இயன்ற வரை மாணவர்களுக்கு இலவசமாக சுவாசக் கவசங்களை வழங்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.
அனைத்துலக செய்தி நிறுவனமான Al-Jazeeraவின் ஆவணப்படமொன்றில் பேட்டியளித்த வங்காளதேச ஆடவர், விசாரணை முழுமையடைந்ததும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.
ஆகத் தாமதமாக இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அவ்வாறு செய்யப்படும் என குடிநுழைவுத்துறை தெரிவித்தது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மலேசியா கள்ளக் குடியேறிகளைக் கையாண்ட விதம் குறித்து அவர் வெளியிட்டிருந்த தகவல் அடிப்படையற்றது முன்னதாகக் கூறப்பட்டிருந்தது.
அனுமதிக்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த பிறகும் தத்தம் சொந்த நாடுகளுக்குத் திரும்பாமல் ஓராண்டுக்கும் கூடுதலாக நாட்டில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டவர்களுக்கு குறைந்தது ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்படும்.
அதிகபட்சமாக மூவாயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்படலாம் என குடிநுழைவுத்துறை எச்சரித்துள்ளது.
Lebanon தலைநகர் Beirut-டில் உள்ள துறைமுகத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.
அவ்வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது; நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather