← Back to list
Adib மரணம்: மற்றொரு மரண விசாரணை!
Aug 05, 2020
தீயணைப்பு வீரர் Muhammad Adib-பின் மரண விசாரணை அறிக்கை, சில பரிந்துரைகளுடன், தேசிய சட்டத் துறைத் தலைவருக்கு மீண்டும் அனுப்பி வைகப்பட்டுள்ளது!
கலவரத்தில் ஈடுபட்டதாகவும் , தீயணைப்பு வண்டியைத் தாக்கியதாவும் கூறி 12 பேரை குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுவது, சட்டத் துறைத் தலைவர் ஒப்புதல் அளித்தால் மற்றொரு மரண விசாரணையை மேற்கொள்வது ஆகியவையும் அந்தப் பரிந்துரைகளில் அடங்கும் என உள்துறை அமைச்சர் Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார்.
"Pertama menuduh 12 orang suspek di bawah Seksyen 143 Kanun Keseksaan yang merusuh dan menyerang jentera bomba.Kedua, mengadakan inkues semula untuk siasatan lanjut jika dipersetujui Peguam Negara di bawah peruntukan Seksyen 339 (2) Kanun Prosedur Jenayah"
Adib-பின் மரணம் ஒரு விபத்து அல்ல; மாறாக, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களை உட்படுத்தி நடந்த குற்றச்செயல் என, கடந்தாண்டு செப்டம்பரில் Shah Alam மரண விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், காவல் துறை அவ்விசாரணையை மீண்டும் தொடங்க முயற்சிப்பதாக அமைச்சர் சொன்னார்.
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், Subang Jaya-விலுள்ள கோவிலொன்றின் வளாகத்தில் நிகழ்ந்த கலவரத்தில் படுகாயமடைந்த Adib, 21 நாட்களுக்குப் பிறகு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
PTPTN-னின் முயற்சிகள்!
தேசிய உயர்க்கல்வி நிதிக்கழகம் PTPTNனிடம் இருந்து கடன் பெற்றவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க, அரசாங்க, பல்வேறு முயற்சிகளை அறிமுகப்படுத்தும் என உயர்கல்வி அமைச்சர் Datuk Dr Noraini Ahmad தெரிவித்துள்ளார்.
"PTPTN bersama dengan perkeso telah menganjurkan virtual job hunt secara atas talian. ptptn juga bantu mengurangkan dengan sentiasa terbuak untuk mebuat rundingan bagi semula bayaran balik pinjaman sehingga umur 60 tahun dan menangguhkan bayaran balik pinjaman sehingga maz 24 bulan."
இவ்வேளையில், செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட்டிருந்த PTPTN கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் காலம், இவ்வாண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
அச்சலுகை இயல்பாகவே அமுலுக்கு வரும் என்பதால், அதற்காக யாரும் விண்ணப்பிக்க தேவை இல்லை.
BSH: மேல்முறையீடு செய்யலாம்!
வாழ்க்கைச் செலவின உதவித் தொகை BSH கிடைக்காதவர்கள், வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பர் ஆறாம் தேதி வரை, இணையம் வாயிலாக அதற்கு மேல்முறையீடு செய்யலாம் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அல்லது, உள்நாட்டு வருவாய் வாரியத்தின் கிளைகள், UTC மையங்கள் ஆகியவற்றுக்கும் நேரடியாக சென்று மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சு தெரிவித்தது.
BSH 3ஆம் கட்ட உதவித் தொகை கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு தகவலை வெளியிடவில்லை!
அண்மையில் கெடா Kubang Pasu-வுக்கு சென்று திரும்பியவர்கள் COVID-19 கிருமித் தொற்றுக்கானப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு உத்தரவிட்டதாக கூறப்படுவதை, சுகாதார துறை தலைமை இயக்குநர் மறுத்துள்ளார்.
சிவகங்கை cluster-ரை தொடர்புப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அத்தகவல் பொய்யானது என, Datuk Dr Noor Hisham Abdullah சொன்னார்.
COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே அப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றாரவர்.
நாட்டில் நேற்று ஒரு COVID-19 சம்பவம் மட்டுமே பதிவான வேளை, இன்னும் 193 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிர்ந்தது Beirut!
Lebanon தலைநகர் Beirut-டிலுள்ள துறைமுகத்தை சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு உலுக்கிய சம்பவத்தில் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது!
ஆகக் கடைசி நிலவரப்படி, அவ்வெடிப்பில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ள வேளை, நான்காயிரம் பேர் வரை காயமடைந்திருப்பதாக தகவல் கூறுகின்றது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் போராடி வருவதாகவும், Beirut புகை மண்டலமாகவும் மாறியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், அச்சம்பவத்தில் காணாமல் போன பலரை தேடும் முயற்சிகள் நீடிக்கின்றன.
கடந்த ஆறாண்டுகளாக பரிசோதிக்கப்படாமல், கிடங்கொன்றில் வைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய ஈராயிரத்து 750 டன் எடையிலான வெடிமருந்துகள் அவ்வெடிப்புக்கு காரணம் என நம்பப்படுகிறது.
அவ்வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணமும் ஆராயப்படுவதாக கூறிய Lebanon அதிகாரிகள், அதற்கு காரணமானவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
இத்துயரச் சம்பவத்தை அடுத்து Lebanon-னில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
COVID-19 பெருந்தொற்றின் சீற்றமே இன்னும் தணியாத நிலையில், Lebanon-னில் நிகழ்ந்துள்ள இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் ஆறுதல் தெரிவித்து, உதவிகள் வழங்கவும் முன்வந்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தவிர்த்து, கட்டார், குவைத், எகிப்து, ஜோர்டன், ஈரான் ஆகிய நாடுகள், நடமாடும் மருத்துவமனை, உள்ளிட்ட இதர மனிதநேய உதவிகளை அறிவித்துள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather