← Back to list
PTPTN: Moratorium டிசம்பர் வரை நீட்டிப்பு!
Aug 04, 2020
தேசிய உயர்க்கல்வி நிதிக்கழகம் PTPTNனிடம் இருந்து பெற்றக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் காலத்தை நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
அவ்வகையில் அச்சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது.
______
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஒரு சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகக் கடைசியாக ஜூலை முதல் தேதி ஒரு சம்பவம் பதிவானது.
மேலும் 16 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்; புதிதாக மரணம் ஏதும் பதிவாகவில்லை.
மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது.
_____
கெடா, Kubang Pasuவில் haj பெருநாள் விடுமுறையை முடித்துக் கொண்டு சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பியவர்கள் Covid-19 பரிசோதனை செய்து கொள்ள தங்களது பிள்ளைகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள தகவல் உண்மையில்லை.
அத்தகைய உத்தரவு எதனையும் வெளியிடவில்லை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
இதனிடையே பள்ளிகளை உட்படுத்திய cluster சம்பவம் ஏதும் இதுவரை பதிவாகவில்லை என அவர் கூறினார்.
எனவே Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றி பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப சுகாதார அமைச்சு ஆலோசனை கூறுவதாக அவர் சொன்னார்.
______
பள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். .
பள்ளிகளை மீண்டும் திறப்பது மீதான வழிகாட்டலின் கீழ், மாணவர்கள் தற்போதைக்கு சுவாசக் கவசங்களை அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆயினும் அது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
______
தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள், 14 நாட்களுக்குள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி முடித்து விட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
_____
Mesyuarat khas SPR, PRN Sabah dua minggu lagi
சபா மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் குறைந்தது இன்னும் இரு வாரங்களில் நடத்தப்படும் என SPR அறிவித்திருக்கிறது.
கடந்த வாரம் சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
______
சிலாங்கூர், Dengkilலில் பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாகக் காவல் துறை தெரிவித்திருக்கிறது.
கொலைக்கான முக்கியக் காரணம் அடையாளம் காணப்பட்டு விட்டாலும், குற்றம் சாட்ட ஏதுவாக ஆதாரங்களைத் திரட்டுவது உள்ளிட்ட விசாரணைகள் தொடருவதாக அது கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather