← Back to list
பள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை!
Aug 04, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஒரு சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகக் கடைசியாக ஜூலை முதல் தேதி ஒரு சம்பவம் பதிவானது.
மேலும் 16 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக மரணம் ஏதும் பதிவாகவில்லை.
மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது.
கெடா, Kubang Pasuவில் haj பெருநாள் விடுமுறையை முடித்துக் கொண்டு சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பியவர்கள் Covid-19 பரிசோதனை செய்து கொள்ள தங்களது பிள்ளைகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள தகவல் உண்மையில்லை.
அத்தகைய உத்தரவு எதனையும் வெளியிடவில்லை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
இதனிடையே பள்ளிகளை உட்படுத்திய cluster சம்பவம் ஏதும் இதுவரை பதிவாகவில்லை என அவர் கூறினார்.
எனவே Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றி பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப சுகாதார அமைச்சு ஆலோசனை கூறுவதாக அவர் சொன்னார்.
Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடும் உத்தரவு சுகாதார அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வெளியிடப்படும்.
கல்வியமைச்சர் Dr Mohd Radzi Jidin அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடப்பு நிலவரத்தைப் பொருத்தது என்றாரவர்.
இதனிடையே பள்ளிக்குச் செல்ல இயலாத மாணவர்களுக்கு குறிப்பாக முக்கியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே இணையம் வழி கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் தொடரப்படும் என அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், பள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
பள்ளிகளை மீண்டும் திறப்பது மீதான வழிகாட்டலின் கீழ், மாணவர்கள் தற்போதைக்கு சுவாசக் கவசங்களை அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆயினும் அது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள், 14 நாட்களுக்குள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி முடித்து விட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
தேசிய உயர்க்கல்வி நிதிக்கழகம் PTPTNனிடம் இருந்து பெற்றக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் காலத்தை நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
அவ்வகையில் அச்சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது.
அரசாங்கத்தின் e-Penjana சலுகையின் கீழ், e-wallet வாயிலாக இதுவரை 45 லட்சம் பேர் தலா 50 ரிங்கிட்டைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்திருக்கிறது.
இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரம் பள்ளிப் பேருந்து ஓட்டுனர்களுக்கு 600 ரிங்கிட் சிறப்பு உதவிநிதியாக வழங்கப்படவிருக்கிறது.
சபா மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் குறைந்தது இன்னும் இரு வாரங்களில் நடத்தப்படும் என SPR அறிவித்திருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather