← Back to list
பள்ளித் தொடங்கும் தேதி: ஜனவரி 20!
Aug 04, 2020
2021ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்!
COVID-19 பரவலைக் கருத்தில் கொண்டு அப்புதியத் தவணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் Dr Mohd Radzi Md Jidin கூறியுள்ளார்.
"Ini boleh membolehkan murid mempunyai tempoh pembelajaran secara bersemuka yang mencukupi sebagai persediaan untuk tahun berikutnya perancangan yang dibuat tidak boleh hanya tertumpu untuk tahun ini sahaja. ini kerana kesan pandemik Covid-19 tidak boleh diselesaikan dalam masa yang singkat."
இவ்வாண்டு பள்ளிகளுக்கான இறுதியாண்டு விடுமுறை குறைக்கப்பட்டிருப்பதோடு, ஆண்டு இறுதித் தேர்வுகள் தள்ளிப் போயிருப்பதாலும், அடுத்தாண்டுக்கான அட்டவணையில் இம்மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
DLP தொடரும்!
அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் முறை PPSMI-யை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என கல்வி அமைச்சு மீண்டும் கூறியுள்ளது.
ஆனால், 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை மொழித் திட்டம் DLP -யை தொடர விரும்பும் பள்ளிகள், தாராளமாக அதனை மேற்கொள்ளலாம் என கல்வி துணை அமைச்சர் Datuk Dr Mah Hang Soon தெரிவித்துள்ளார்.
"Buat sementara waktu, kita menekankan program DLP dan akan teruskan. Jika ada sekolah memilih untuk melaksanakan pengajaran dan pembelajaran dalam DLP, kita akan benarkan"
PPSMI திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு துணை அமைச்சர் மக்களவையில் பதிலளித்தார்.
MySejahtera செயலி கட்டாயமாக்கப்படும்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் MySejahtera செயலிப் பயன்பாடு கட்டாயமாக்கப்படும்!
அது கூடிய விரைவில் அரசாங்கப் பதிவேட்டில் இடம்பெறும் என்று தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
என்றாலும், உட்புறப் பகுதிகளில் இணைய வசதிகள் இல்லாத கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
பொய்ச் செய்தி பரப்பாதீர்கள்!
கெடா Napoh-வில், சிவகங்கை COVID-19 cluster தொடர்பில் பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என பொது மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்!
அம்மாநிலத்தில், அக்கிருமித் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலைக் காட்டிலும் அதிகம் எனக் கூறிப் பரவியுள்ள பொய்ச் செய்தி குறித்து காவல் துறை அந்த எச்சரிக்கையை விடுத்தது.
இவ்வேளையில், இந்த cluster-ருக்கு காரணமானவருக்கு எதிராக சில மிரட்டல்கள் இருப்பதாக எழுந்துள்ள தகவல் தொடர்பில் பேசிய சுகாதரா துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah, பொது மக்கள் எந்த சூழ்நிலையிலும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.
"jadi pada individu tersebut memang telah pun melanggar dan telah pun denda individu tersebut dan dia positif, kita kena masuk ke hospital dan diasingkan dan saya syokrkan untuk mengambil tindakan dalam peraturan dan dan akta jangan kita menjalankan dan mengambil undang undang dalam tangan kita."
மற்றொரு நிலவரத்தில், சிவகங்கை cluster-ரை அடுத்து கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைத் தடுப்புகள் உள்ளிட்ட இதர நடவடிக்கைகள் குறித்து பதற்றமடைய வேண்டாம் என, கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்
Dato Dr Mohd Hayati Othman கேட்டுக் கொண்டுள்ளார்.
IMAGE: Berita Harian
மாறாக, தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ள SOP-களை பின்பற்றி, COVID-19 கிருமித் தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
"28 hari dari sekarang kalau tidak ada kes Inshallah kita hijau kembali lah; Sekarang ini daripada hijau kita telah pergi ke kuning. Jadi kita tidak mahu kuning ini berkekalan; dia akan terus berkurangan sehinggalah kita diistiharkan hijau kembali dan seterusnya bebas daripada jangkitan COVID-19 ini"
சிவகங்கை cluster தொடர்பில் இதுவரை 425 பேர் பரிசோதிக்கப்பட்டு விட்ட நிலையில், 21 பேருக்கு COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சிவகங்கை Cluster-ரை அடுத்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், சுகாதார அமைச்சு விதித்துள்ள அனைத்து SOP-களையும் முறையாக பின்பற்றி வருவதை காண முடிவதாக, மாநில Menteri Besar-ரின் சிறப்பு அதிகாரி குமரேசன் தெரிவித்துள்ளார்.
COVID-19 தொடர்பில் பகிரப்படும் தகவல்களை முதலில் சரிபார்ப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், உண்மைத் தகவல்களைப் பெற பொது மக்கள் MySejahtera செயலியைப் பயன்படுத்தலாம் என கூறினார்.
நேப்பாள ஆடவர் கைது!
KL Wangsa Maju-வில் நேப்பாள பாதுகாவலர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் நேப்பாள ஆடவர் கைதாகியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரை தாங்கள் தொடர்ந்து தேடி வருவதாக கூறிய காவல் துறை, அச்சம்பவம் குறித்து தகவலறிந்தவர்கள் முன் வந்து உதவுமாறும் கேட்டுக் கொண்டது.
முன்னதாக, அந்த நேப்பாள பாதுகாவலர் கடுமையாக தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather