Now Playing

Maragathamani/SPB/Chitra/Mammootty/Bhanupriya

Nenjamadi Nenjam

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

Nenjamadi Nenjam

Maragathamani/SPB/Chitra/Mammootty/Bhanupriya

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Inimai@RAAGA Current Show

Inimai@RAAGA

with Maran

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Moratorium நீட்டிப்பும் வங்கி உதவிகளும்!

Jul 29, 2020


பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் கால நீட்டிப்பையும்   இலக்கு வைக்கப்பட்டோருக்கான வங்கி உதவிகளையும் அறிவித்திருக்கிறார்.

வேலை இழந்தவர்களுக்கு வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

அதே சமயம் மாதச் சம்பளம் குறைக்கப்பட்டவர்களுக்கு அதே விகிதத்தில் மாதாந்திர தவணைக் கட்டணம் குறைந்தது ஆறு மாதங்களுக்குக் குறைக்கப்படும்.

இதனிடையே, தனிநபர்கள், வியாபாரிகள், அங்காடி நடத்துனர் உள்ளிட்ட சிறு, நடுத்தர தொழில்துறையினர் ஆகியோருக்கு உதவ வங்கிகள் முன் வந்திருப்பதாக பிரதமர் சொன்னார்.

அதாவது கடன் பெற்றவர்களின் நிலைமையைப் பொருத்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை வட்டியை மட்டுமே செலுத்த அனுமதிப்பது, மாதா மாதம் செலுத்த வேண்டிய தவணைப் பணத்தைக் குறைக்கும் பொருட்டு வங்கிக் கடன்களுக்கான மொத்த கால அவகாசத்தை நீட்டிப்பது, கடன் பெற்றவர்கள் மீட்சியடைந்து நிலைத்தன்மை பெறும் வரை அவர்களுக்கு வேறு ஏதாவது விலக்கு அளிப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.  

நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 13 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஐந்து உள்நாட்டில் பரவியதாகும்.

மேலும் ஐவர் பூரண குணமடைந்துள்ளனர்.

220 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்த மரண எண்ணிக்கை 124 ஆகவே உள்ளது.

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razakக்கிற்கு  ஆதரவு வழங்க KL நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடியவர்கள் CCTV மூலம் அடையாளம் காணப்படுவர் என தேசிய காவல் படைத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதோடு கூடல் இடைவெளிக்கான SOP மீறப்பட்டிருப்பது தொடர்பில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படும் என அவர் சொன்னார்.

Datuk Seri Najib, தமக்கு விதிக்கப்பட்ட கூடுதல் பிணை உத்தரவாதத் தொகையான 10 லட்சம் ரிங்கிட்டை உயர் நீதிமன்றத்தில் இன்று  செலுத்தினார்.

42 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய SRC International வழக்கில் அந்த முன்னாள் பிரதமருக்கு நேற்று 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.   

இலக்கு வைக்கப்பட்டத் தரப்பினருக்கான பெட்ரோல் உதவித் தொகைத் திட்ட அமலாக்கத்தைத் தொடக்கும் தேதியை அரசாங்கம் இன்னமும் முடிவு செய்யவில்லை.

தற்போது RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 8 சென் என நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாகவே இருப்பதை உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு சுட்டிக் காட்டியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us