← Back to list
Najibப்புக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்!
Jul 28, 2020
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razakக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
42 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய SRC International வழக்கில் அவர் மீது கொண்டு வரப்பட்ட அனைத்து ஏழு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து KL நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
அக்குற்றச்சாட்டுகளில் 3 நம்பிக்கை மோசடி தொடர்பானவை; மூன்று பணச்சலவை சம்பந்தப்பட்டவை; ஒன்று அதிகார முறைகேடு குற்றச்சாட்டாகும்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 39 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 28 உள்நாட்டில் பரவியதாகும்.
மொத்த மரண எண்ணிக்கை 124 ஆகவே இருக்கிறது.
இவ்வேளையில், கெடாவிலும் சரவாக்கிலும் இரு புதிய cluster சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சரவாக்கில் PPE எனும் சுய பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில் PPE உபகரணங்களின் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதை உறுதிச் செய்ய 180க்கும் அதிகமான தயாரிப்பு நிறுவனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அது விளக்கியது.
பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சுவாசக் கவசங்களின் கையிருப்பு இருக்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சில சுவாசக் கவசத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் தயாரிப்புகளை அதிகரித்திருப்பதாக மலேசிய உற்பத்தியாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வரும் சனிக்கிழமையில் இருந்து பொது இடங்களில் குறிப்பாக கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பொதுமக்கள் சுவாசக் கவசத்தை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பத்து பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
மேலும் சிலருக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த சரவாக் மாநில அரசு, Kuching, Samarahan, Serian ஆகிய பகுதிகளில் வணிக நேரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.
ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து அப்பகுதிகளில் உள்ள வணிகத் தளங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.
பிற செய்திகள்.....
தேசியத் தினத்தையொட்டி பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, 2020 தேசிய மாதக் கொண்டாட்டத்தையும், Jalur Gemilang-கை பறக்கவிடும் இயக்கத்தையும் தொடக்கி வைத்துள்ளார்.
இவ்வாண்டுக்கான தேசிய தின மற்றும் மலேசிய தின கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் "Malaysia Prihatin" அதாவது பரிவுமிக்க மலேசியா என்பதாகும்.
-----
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் புதிதாக சுமார் 49 ஆயிரம் பேர் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் அத்தகவலை வெளியிட்டுள்ளது.
-----
சமையல் மூலம் Youtubeப்பில் பிரபலமான S. பவித்ராவுக்கு வழங்கப்படும் ஈப்போ மாநகர மன்றத்தின் முன் மாதிரி விருது நிலை நிறுத்தப்படும் என ஈப்போ மேயர் அறிவித்திருக்கிறார்.
தமது கணவருடனான அண்மைய குடும்ப வன்முறைச் சம்பவத்தை அடுத்து அவ்விருதைத் தாம் நிராகரிக்க விரும்புவதாக இதற்கு முன் பவித்ரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather