Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுவாசக் கவசம் வழங்குவது பற்றி பரிசீலனை!

Jul 28, 2020


B40 உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு, சுவாசக் கவசம் வழங்குவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கின்றது!

வரும் சனிக்கிழமை தொடங்கி, பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் சுவாசக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதை அடுத்து, சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah அவ்வாறு கூறியிருக்கின்றார்.

"We have increased full capacity for public transport (now). There is no social distancing in public transport and we understand. We have discussed this issue. On a plane, train, or even in buses, people must put on a mask. That's compulsory. The second issue is that we are implementing a mandatory face mask rule starting Aug 1 in crowded places and confined areas where people cannot avoid crowding. They (must) put on a mask, that's what we have been advocating"

சுவாசக் கவசம் அணிவதன் வாயிலாக, COVID-19 பெருந்தொற்றுப் பரவலை 60 விழுக்காடு கட்டுப்படுத்த முடியும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டில் நேற்று ஏழுப் புதிய COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, இன்னும் 179 பேர் அக்கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுகின்றனர்.

அலட்சியம் வேண்டாம் ! SOP-யைப் பின்பற்றுங்கள்!

COVID-19 கிருமித் தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அனைவரும் அதற்கான SOP-களை பின்பற்ற வேண்டும்!

ஒருவேளை, தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தால், நாடு மூன்றாம் கட்ட COVID-19 அலையை எதிர்நோக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என சுகாதார துறை  தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.

"Kluster kluster yang baru bagaikan bahan api, kita ini kalau tak patuh kepada sop sebagai bahan api jadi kalau baru jumpa dengan bahan api akan merabak satu pembakaran yang besar jadi kes akan meningkat secara mendadak, tetapi sekrang ini pada peringkat awal kalau kita boleh mengawal baru tersebut kalau kita boleh amalkan SOP iaitu pematuhan pemakaian mask dan juga penjarakkan sosial."

அண்மைய நாட்களாக நாட்டில் அதிகரித்து வரும் COVID-19 cluster சம்பவங்கள் கவலையளிப்பதாகவும் அவர் சொன்னார்.

சிலாங்கூரில் COVID-19 சம்பவங்கள் அதிகரிப்பு!

சிலாங்கூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் COVID-19 சம்பவங்களை கட்டுப்படுத்த, மாநில அரசாங்கம் நீண்ட கால திட்டத்தை அறிவிக்கவிருக்கின்றது.

இதன் தொடர்பில், COVID-19 பணிக்குழு மற்றும் மாநில சுகாதார துறையை தாம் சந்திக்கவிருப்பதாக மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்படும் வரை அந்த நீண்ட கால திட்டம் இருக்கும் என Datuk Seri Amirudin Shari கூறினார்.

இந்நிலையில், கொரோனாப் பரவலை தடுக்க மார்ச் மாதம் முதலில் அமுலுக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மத்திய அரசு மீண்டும் கொண்டு வருவது என்றால் கூட, மாநில அரசு அதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

MCO என்பது மக்களை பயமுறுத்துவதற்காக அல்ல மாறாக COVID-19 சம்பவங்களை தடுக்க அதுவே சிறந்த வழி என்பதை அவர் வலியுறுத்தினார்.
 

COVID-19: இந்தியாவில் புதிதாக 50,000 சம்பவங்கள் 

இந்தியாவில் COVID-19 சம்பவங்கள் குறைந்தப்பாடில்லை!

அங்கு ஆகக் கடைசியாக 24 மணி நேரத்தில், ஏறக்குறைய 50 ஆயிரம் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் மட்டும் நேற்று கிட்டத்தட்ட ஏழாயிரம் பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதியாகியிருக்கின்றது.

தமிழகத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் COVID-19 பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதே, சம்பவங்கள் எண்ணிக்கை அதிகமாக வெளியில் வரவும் காரணம் என கூறப்படுகிறது.

எனினும், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, Brazil ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மரண எண்ணிக்கை குறைவே என தகவல் கூறுகிறது.
 

COVID-19: உலக முன்னாள் அழகி ஐஸ்வர்யா - மகள் குணமடைந்தனர்!

மும்பையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வந்த உலக முன்னாள் அழகி ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும், குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருக்கின்றனர்.

இதரச் செய்திகள்.....

SRC வழக்கு: Najib மீதான தீர்ப்பு இன்று! 

இன்று மலேசியா மட்டுமின்றி உலக நாடுகளின் கவனமும், KL உயர்நீதிமன்றத்தின் பக்கம் திரும்பியிருக்கின்றது!

42 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான SRC International ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak மீதான தீர்ப்பை நீதிமன்றம் அறிவிக்கவிருக்கின்றது.

இன்னும் ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் அந்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படும் வேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 67 வயது Najib-புக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

அந்த SRC வழக்கில், Pekan MP-யுமான Najib, அதிகாரத் துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் பணச்சலவை செய்தது உட்பட ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.

பாதுகாப்பு கருதி, அவ்வழக்குச் சார்ந்தவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் KL உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய இன்று அனுமதி இல்லை.

சிங்கப்பூர் பிரதமராக Lee Hsien Loong பதவியேற்றார்!

சிங்கப்பூர் பிரதமராக Lee Hsien Loong-கும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று, ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

புதிய அமைச்சரவையில், முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகத் தொடரும் வேளை, Dr Viviyan Balakrishnan வெளியுறவு அமைச்சரகாவும், கா. சண்முகம் சட்டத் துறை மற்றும் உள்துறை அமைச்சராகவும்,  எஸ் ஈஸ்வரன் தகவல் தொடர்புத் துறை அமைச்சரகாவும், இந்திராணி ராஜா பிரதமர் துறை அமைச்சராகவும் இடம்பெற்றுள்ளனர்.
 

சுகு - பவித்ரா: இப்போதைக்கு வேண்டாம்!

தனது குடும்பப் பிரச்னை தொடர்பில், சமூக நலத் துறையின் ஆலோசனைகள் உள்ளிட்ட உதவிகளைப் பெற YouTube புகழ் சுகு-பவித்ரா தம்பதி மறுத்துள்ளனர்.

இருந்த போதிலும், அவர்களை தொடர்ந்து கண்காணித்து, எந்நேரத்திலும் உதவி வழங்க அத்துறை தயாராக இருப்பதாக பேரா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather