Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: பரிசோதனைக்குச் செல்லாதவர்கள் இன்று முதல் கைது!

Jul 27, 2020


வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு திரும்பி, இன்னும் COVID-19னுக்கான 2ஆவது மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ளாமல் இருப்போர் இன்று முதல் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள்!

கடந்த வெள்ளிக்கிழமைக்கு முன்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்களை தற்காப்பு அமைச்சர் அவ்வாறு எச்சரித்துள்ளார்.

அவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், இன்னும் 2ஆவது COVID-19 பரிசோதனை செய்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்தின் முடிவை மலேசிய மருத்துவர்கள் சங்கம் வரவேற்றுள்ளது!

சொந்த வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அரசாங்கம் வழங்கிய தளர்வை சம்பந்தப்பட்டவர்கள் மதித்து, இப்பெருந்தொற்றில் இருந்து நாட்டை காப்பற்ற ஒத்துழைக்க வேண்டும் என, அச்சங்கத்தின் தலைவர் DR N ஞானபாஸ்கரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தத்தம் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட அவர்கள், 13ஆவது நாளில் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தனர்.

ஆனால், ஏறக்குறைய மூவாயிரம் பேர் இன்னும் அப்பரிசோதனையை செய்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

2ஆவது பரிசோதனைக்கு செய்ய வேண்டியவர்கள், அருகிலுள்ள மாவட்ட சுகாதார துறைக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.


நாட்டில் COVID-19 சம்பவங்கள் மூன்று இலக்க எண்ணுக்கு அதிகரித்தால், மார்ச் மாதம் அமுலுக்கு வந்த முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமுல்படுத்தப்படும்!

அப்பெருந்தொற்றை கட்டுப்படுத்த அதனை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என தற்காப்பு அமைச்சு கூறியுள்ளார்.

நாட்டில் நேற்று மேலும் 13 புதிய கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்ட வேளை அறுவர் குணமடைந்தனர்.

இன்னும் ஏறக்குறைய 173 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சுவாசக் கவசம் அணிவதால் சிலருக்கு  முகத்தில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம்!

எனினும், அவற்றை அவர்கள் சுயமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என ஆலோசனை கூறுகின்றார், சுவாச நோய் சிகிச்சை நிபுணர் Dr Kow Ken Siong.

அதிக நேரம் சுவாசக் கவசம் அணிவதால், அதன் ஈரப்பதம் அதிகரித்து, சிலருக்கு முகப்பரு உள்ளிட்ட சில தோல் பிரச்னைகள் உருவாகலாம்; வறண்ட சருமத்தைக் காட்டிலும், எண்ணெய் பசை சருமம் உடையவர்களுக்கு இப்பிரச்னை மோசமாக காணப்படலாம் என்றாரவர்.

சிலருக்கு தோல் அழற்சிக் கூட ஏற்படலாம்; இப்பிரச்னைக்களுக்கு தீர்வாக, சம்பந்தப்பட்டவர்கள், தாங்கள் பயன்படுத்தும் reusable சுவாசக் கவசத்தை தினமும் துவைத்து சுத்தப்படுத்துவது, சுவாசக் கவசம் அணியும் போது முக ஒப்பனைகளை தவிர்ப்பது, சுவாசக் கவசப் பயன்பாட்டுக்கு பிறகு முகத்தை சுத்தமாக கழுவுவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் சுவாசக் கவசம் அணியத் தவறினால், ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


உள்ளூர் YouTube பிரபலமான சுகு-பவித்ரா, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஏதுவாக, சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறியிருக்கின்றனர்.

பொது மக்களின் கவனத்தை ஈர்க்ககூடிய எந்தவொரு நடவடிக்கையில் இனி ஈடுப்படப் போவதில்லை என தாங்கள் முடிவெடுத்திருப்பதாக அவர்கள், Sinar Harian-னிடம் தெரிவித்துள்ளனர்.

குறுகிய காலத்திலேயே 7 லட்சம் followers-சை ஈர்த்த தங்களது YouTube சமையல் காணொளிகளையும் அவர்கள் அகற்றியுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather