Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19-னை தடுக்கும் காப்பு? வசமாக சிக்கியப் பெண்!

Jul 25, 2020


Nazri-யின் பரிந்துரையை வரவேற்ற Loke!

நாட்டில் வேட்பாளர் அடிப்படையில் என்றில்லாமல் கட்சி சார்ந்து தேர்தலை நடத்த சட்டத் திருத்தம் கொண்டு வரும் பரிந்துரையை வரவேற்பதாக DAP தெரிவிக்கிறது.

UMNO-வைச் சேர்ந்த Padang Rengas நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Nazri Aziz முன்வைத்த அப்பரிந்துரையை கொள்கை அளவில் தாம் ஏற்றுக் கொள்வதாக, DAP தேசிய அமைப்புச் செயலாளர் Anthony Loke சொன்னார்.

அவ்விவகாரத்தை ஆழமாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை அமைத்து அதற்கு Nazri-யையே தலைமையேற்கச் செய்யலாம் என்றும், Loke, MalaysiaKini-யிடம் தெரிவித்தார்.

ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றால், அத்தொகுதி அக்கட்சிக்கே சொந்தம்; வென்றவர் கட்சித் தாவினாலும், தொகுதி மாறாது; அக்கட்சியே அத்தொகுதியை வைத்திருக்க வகை செய்வதே, Nazri கூறிய கட்சி அடிப்படையிலான தேர்தல் முறையாகும்.

கட்சித் தாவல் கலாச்சாரத்தைக் களையவும், கையூட்டு அம்சங்களை முறியடிக்கவும் இனி வேட்பாளர் அடிப்படையில் என்றில்லாமல், கட்சி அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என முன்னதாக மக்களவையில் Nazri பரிந்துரைத்தார்.

அடுத்த மாதம் வரை நீடிக்கலாம்!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை, ஆகஸ்ட் மாத மத்தி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

குறிப்பாக, பேராக், சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், மேற்கொ ஜொகூர், கிழக்கு சபா ஆகியப் பகுதிகளில் காலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைப் பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

மாலையில், Perak, Selangor, Putrajaya, Kuala Lumpur மற்றும் மலாக்கா ஆகியவற்றில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் என்றும் அத்துறை கூறியுள்ளது.

இவ்வாரத் தொடக்கத்தில் கனமழையை அடுத்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
 

தேர்ந்தெடுக்க முடியாது!

வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு திரும்புவோர், தங்களுக்கான COVID-19 தனிமைப்படுத்தும் மையங்களை தேர்ந்தெடுக்க முடியாது!

நாட்டின் அனைத்துலக எல்லைகளில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்டவர்களை அம்மையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையை தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் NADMA-வும், மலேசிய பொது தற்காப்புப் படை APM-மும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தொடங்கி, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தத்தம் சொந்த வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் முறையை அரசாங்கம் அகற்றியது.

அவ்வாறு வீடுகளில் தங்களை 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களில் சிலர், அண்மைய காலமாக எந்த கவலையும் இன்றி வெளியே குறிப்பாக உணவகங்களுக்குச் சென்று உணவு உண்டு வரும் சம்பவங்களை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 12 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகள், நிர்ணயிக்கப்பட்ட மையங்களில்  தங்களது பெற்றோருடன் ஒரே அறையில் தங்கலாம்; எனினும், அவர்கள் ஒரே நாட்டில் இருந்து மலேசியாவுக்கு திரும்பிவரகளாக இருக்க வேண்டும்.

அதோடு, முன்கூட்டியே ஒப்புதல் கடிதத்திலும் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என அரசாங்கம் கூறியிருக்கின்றது.
 

தேடப்பட்டு வந்த வங்காளதேச ஆடவர் கைது!

அனைத்துலக செய்தி நிறுவனமொன்று, மலேசியாவைப் பற்றி வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப் படம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வங்களாதேச ஆடவர்  கைதாகியுள்ளார்.

COVID-19 பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில், இந்நாட்டிலுள்ள கள்ளக் குடியேறிகள் மோசமாக நடத்தப்பட்டதாக கூறி, அவ்வாடவர் அச்செய்தி நிறுவனத்திற்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்ததன் பேரில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அந்த 25 வயது ஆடவர் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, மீண்டும் இந்நாட்டுக்குள் நுழைய முடியாதபடிக்கு கருப்பு பட்டியலிடப்படுவார் என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளார். 

COVID-19-னை தடுக்கும் காப்பு? வசமாக சிக்கியப் பெண்!

கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் வாங்கி, ஏமார்ந்து விட வேண்டாம் என, உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு பொது மக்கள் நினைவுறுத்தியிருக்கின்றது!

அதே சமயம், பொருட்களை தங்களது இஷ்டத்திற்கு வியாபாரம் செய்ய வேண்டாம் என அமைச்சு, வியாபாரிகளை எச்சரித்துள்ளது.

Image: Berita Harian

COVID-19 கிருமித் தொற்றை தடுக்க வல்ல காப்பு எனக் கூறி முகநூலில் அதனை விற்க முயன்ற நேரடி விற்பனை முகவரான பெண் ஒருவருக்கு 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதை அமைச்சு சுட்டிக் காட்டியது.

580 ரிங்கிட் விலையிலான அக்காப்பு குறித்து, பொது மக்கள் புகாரளித்ததை அடுத்து அப்பெண் விசாரிக்கப்பட்டார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் அப்பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் அமைச்சு கூறியது.
 

இந்தியாவில் 13 லட்சம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் COVID-19 சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றன!

இம்மாத தொடக்கத்தில் வெறும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் மட்டுமே அத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், கடந்த மூன்றே வாரங்களில் அவ்வெண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து, 13 லட்சத்தை தாண்டியுள்ளது.

மாநில வாரியாக, மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக  3 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 

அதற்கடித்தப்படியாக, தமிழகம் உள்ளது; அங்கு ஏறக்குறைய 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரு நாளில், ஆறாயிரத்து 700-க்கும் அதிகமானோருக்கு COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வேளையில், இந்தியா முழுக்க இன்னும் 4 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அப்பெருந்தொற்றுக்காக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் மேல் என இந்திய சுகாதார அமைச்சின் தகவல் கூறுகின்றது.

இந்நிலவரத்தை அடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அடுத்த வாரம் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ சந்திப்பு நடத்துவுள்ளாராம்.

அச்சந்திப்பில்,  கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா சம்பவங்களை பதிவுச் செய்த நாடுகள் பட்டியலில்,  அமெரிக்கா, Brazil ஆகியவை அடுத்து இந்தியா தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கின்றது.

அமெரிக்காவில் கொரோனா சம்பவங்கள் 40 லட்சத்தை கடந்துள்ள வேளை Brazil-லில் அவ்வெண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather