← Back to list
அதிகரிக்கும் Cluster சம்பவங்கள்!
Jul 24, 2020
நாட்டில் இன்று புதிதாக 21 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன!
அவற்றில் 16 சம்பவங்கள் உள்ளூரில் பரவியவை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் 3 புதிய Cluster சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சு கூறியது.
இன்னும் ஏறக்குறைய 161 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, நேற்று சுமார் ஆயிரத்து 244 மலேசியர்கள், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.
அவர்கள், இந்தோனிசியா, கட்டார், சிங்கப்பூர், கம்போடியா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பியதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளை, எஞ்சியவர்கள் தத்தம் வீடுகளில் கட்டாயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டதாக அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
இன்று தொடங்கி வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு திரும்புவோர், அரசாங்கம் நிர்ணயிக்கும் இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
மற்றொரு நிலவரத்தில், நேற்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியது தொடர்பில், நாடு முழுவதும் 227 பேரை PDRM கைது செய்திருப்பதாகவும் Datuk Seri Ismail Sabri தெரிவித்தார்.
விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்!
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதற்கான அறிகுறியாக கை மணிக்கட்டில் இளஞ்சிவப்பு நிற tag-கை அணிந்துள்ளவர்கள், அநாவசியமாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பதை கண்டால், பொது மக்கள் உடனடியாக காவல் துறையிடம் புகாரளிக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
இவ்வேளையில், பேராக்கில் அவ்வாறு tag அணிந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய 51 வயது ஆடவர், அதனை மீறியதற்காக ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திரும்பியதை அடுத்து, அவ்வாடவர் 14 நாட்களுக்கு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தார்.
எனினும், அவ்விதிமுறையை பொருட்படுத்தாமல், உணவகம் ஒன்றில் உணவு உண்டுக் கொண்டிருந்த போது கைதானார்.
கெடா Jitra-வுக்கு அருகே, இதேப் போன்று, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறையை மீறிய உணவக நடத்துநர் ஒருவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜூலை 13ஆம் தேதி தான் அந்த 57 வயது நபர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியதாக மாவட்ட காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
முதல் COVID-19 பரிசோதனையில் அவருக்கு அத்தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது;
அடுத்த வாரம் அவருக்கு 2ஆவது பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சுக்காக JPJ காத்திருக்கிறது!
வாகனங்களில், சிறார்களுக்கான பாதுகாப்பு இருக்கைகள் பயன்பாட்டை அமுலுக்கு கொண்டு வர, சாலைப் போக்குவரத்து துறை JPJ, போக்குவரத்து அமைச்சின் அனுமதிக்காக மட்டுமே காத்திருக்கின்றது!
இது நாள் வரை அந்த இருக்கையைப் பயன்படுத்தக் கூறி, சாலைப் பயனர்களுக்கு அறிவுரைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
பார்க்கப் போனால், அந்த இருக்கைப் பயன்பாடு இவ்வாண்டு ஜூன் மாதம் அமுலுக்கு வந்திருக்க வேண்டும்; ஆனால் COVID-19 சீற்றம் காரணமாக அது தள்ளிப் போயிருப்பதாக JPJ கூறியது.
இதையடுத்து அமைச்சின் அடுத்த உத்தரவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் JPJ தெரிவித்தது.
இவ்வேளையில், 2016ஆம் ஆண்டு தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரைக்குமான புள்ளி விவரப்படி, சுமார் ஆயிரத்து 700க்கும் அதிகமான விபத்துகள் சிறார்களை உட்படுத்தி நிகழ்ந்துள்ளதாகவும் JPJ கூறியது.
எனவே, இந்த பாதுகாப்பு இருக்கைகள் பயன்பாட்டை மெத்தனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என JPJ பொது மக்களை கேட்டுக் கொண்டது.
குற்றச்சாட்டுகளை மறுத்த சுகு!
உள்ளூர் Youtube பிரபலம் பவித்ராவின் கணவர் சுகு மீது இன்று ஈப்போ Sessions நீதிமன்றத்தில் 2ஆவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
ஏற்கனவே, பொது இடத்தில் அபாயகரமான ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுகு, கடந்த 21ஆம் தேதி மருத்துவமனை ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் தனது மனைவியை வேண்டுமென்றே தாக்கு காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
எனினும், தம்மீதான அவ்விரு குற்றச்சாட்டுகளையும் சுகு மறுத்திருக்கின்றார்.
இவ்வேளையில், நடந்த சம்பவத்தை பற்றி இனியும் யோசிக்காமல், பழையப்படி YouTube-பில் தனது சமையல் பதிவுகளை தொடரப் போவதாக, பவித்ரா கூறியிருக்கின்றார்.
நடந்தவற்றுக்காக தனது கணவரை மன்னித்து விட்டதாகவும், 28 வயது பவித்ரா தெரிவித்துள்ளார்.
சுகு மீதான வழக்கு, ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் செவிமடுப்புக்கு வரும்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான புதிய விலை!
இன்று நள்ளிரவு தொடங்கி, RON 95 மற்றும் RON97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு முறையே 4 சென் குறைகின்றது.
டீசலுக்கான விலை லிட்டருக்கு 5 சென் இறக்கம் காண்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather