← Back to list
கேரளாவில் உச்சம் பெற்ற கொரோனா!
Jul 23, 2020
நேரம் - எண்ணிக்கையில் மாற்றமில்லை!
அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகளை சென்று காண்பதற்கான நேரம் மற்றும் வருகையாளர்கள் எண்ணிக்கையில் மாற்றமில்லை!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் இருந்தது போலவே அது நீடிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவை இருந்தால் மட்டுமே, வருகையாளர்கள் அவசர சிகிச்சை வார்டுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சு கூறியது.
மருத்துவ முன்பதிவுகளைக் கொண்டுள்ளவர்களுடன் கூடுதலாக ஒருவர் மட்டுமே உடன் செல்ல முடியும்; எனினும், சிறுப் பிள்ளைகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு அவ்விதிமுறை இல்லை.
மருத்துவமனைகளில் COVID-19 கிருமித் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.
அலட்சியம் வேண்டாம்!
சிலாங்கூரில் COVID-19 பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவற்கான SOP-களை பின்பற்றுவதில் இன்னும் பலர் அலட்சியம் காட்டி வருவது குறித்து மாநில Menteri Besar அதிப்ருதி தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, ஜூன் 10ஆம் தேதி, மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்தப் பிறகு, பலர் மெத்தனமாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, SOP அமுலாக்கம் மறு ஆய்வு செய்யப்படும் என MB கூறியுள்ளார்.
தாய்லாந்து தீவிர யோசனை!
தாய்லாந்து, COVID-19 பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்தும் முயற்சியாக வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க திட்டமிடுகிறது.
தாய்லாந்தில், கடந்த இரு மாதங்களில் உள்ளூரில் பரவியதாக கொரோனா சம்பவம் எதுவும் பதிவாகவில்லை.
கேரளாவில் முழு ஊரடங்கு?
தென்னிந்திய மாநிலம் கேரளாவில் கொரோனா வைரஸ் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றிருப்பதால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
Image: Wikipedia
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வேளையில், தமிழகத்தில் நேற்று மேலும் ஐயாயிரத்து 800க்கும் அதிகமானோருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சில உள்நாட்டு தகவல்கள்.....
சீக்கிரம் கைது செய்யப்படுவார்கள்!
சிலாங்கூர் Shah Alam-மில், நாட்டுத் தலைவர்களின் ராட்சத சுவரோவியத்தின் மீது தகாத வார்த்தைகளை எழுதி, அதனை சேதப்படுத்தியதாக நம்பப்படும் நபர்களை அடையாளம் காண நல்ல அறிகுறி கிடைத்திருப்பதாக காவல் துறை கூறியிருக்கின்றது.
அவர்கள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அத்துறை நம்புகிறது.
அந்த சுவரோவியத்தை இரு பெண்கள் சேதப்படுத்துவதுப் போன்ற காட்சி, முன்னதாக CCTV ஒன்றில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாக்கி வரி செலுத்த Najib-புக்கு உத்தரவு!
ஏறக்குறைய 7 ஆண்டுகளில் தாம் செலுத்தாமல் இருந்த 1 புள்ளி 69 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பாக்கி வரிப் பணத்தை செலுத்துமாறு, முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak-கிற்கு KL உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த Pekan MP, 2011ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு தொடங்கி செலுத்தாமல் இருந்த வரி, அதற்கான வட்டி மற்றும் அபராதத்தை அத்தொகை உட்படுத்தியிருக்கின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather