← Back to list
சபாஷ்! சரியான தண்டனை!
Jul 17, 2020
மது போதையில் வாகனமோட்டுவோருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ஒன்றரை லட்சம் ரிங்கிட் வரை அபராதம், என போக்குவரத்து சட்டத்தில் செய்யப்படவிருக்கும் திருத்தம் அமுலுக்கு வந்தால், அதனைத் தாம் முழு மனதோடு வரவேற்பதாக தேசிய காவல் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மது போதையில் வாகனமோட்டும் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க இதுவே மிகச் சிறந்த வழி என Tan Sri Abdul Hamid Bador தெரிவித்தார்.
போக்குவரத்து சட்டத்தில் இத்திருத்தத்தைச் செய்வதற்கான தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.
______
அறிவியல் மற்றும் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் PPSMI திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவை தேசிய ஆசிரியர் பணியாளர்கள் சங்கம் NUTP வரவேற்றுள்ளது.
இதற்கு பதிலாக இரு மொழி பாட திட்டத்தைக் கல்வி அமைச்சு அமுல்படுத்தலாம் என அது வலியுறுத்தியது.
அதன் கீழ் அறிவியல் மற்றும் கணித பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிப்பதற்கு போதுமான் ஆசிரியர்கள் இருப்பதை அமைச்சு உறுதிபடுத்த வேண்டும் என்றும் அது கூறியது.
பெரும்பாலான பெற்றோகளும் இந்த DLP பாட திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ள தகவலையும் NUTP இன்று Malay Mailலிடம் தெரிவித்தது.
______
இதனிடையே PPSMIயை ரத்து செய்யும் திட்டத்தை Dewan Bahasaவும் வரவேற்றுள்ளது.
முந்தைய அரசாங்கத்தின் கீழ் இந்த PPSMI திட்டம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்பதை DBP சுட்டிக்காட்டியது.
அதோடு அதற்கான ஒதுக்கப்பட்ட 50 பில்லியன் ரிங்கிட்டும், மாணவர்களின் பின்தங்கிய அடைவு நிலையால் நஷ்டத்திற்குள்ளாகியதாக அது மேலும் சொன்னது.
______
பினாங்கு, Balik Pulauவில் Macau மோசடி கும்பலிடம் ஏமாந்த முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் 1 லட்சத்து 67ஆயிரம் ரிங்கிட்டைப் பரிகொடுத்துள்ளார்.
கள்ளப்பணம் தொடர்புடைய குற்றத்தில் தமக்கு சம்பந்தமிருப்பதாகக் கூறி வந்த அழைப்பை நம்பி அவர் ஏமாந்துள்ளார்.
______
மறைந்த தீயணைப்பு வீரர் Muhammad Adibபின் வழக்கில், அவர் உயிரிழக்கும் வரை கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, அரச மலேசிய காவல் படை மீது வழக்கு தொடரவுள்ளனராம் Adibபின் குடும்பத்தினர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather