← Back to list
விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அனைத்து தரப்பினரின் பங்கும் அவசியம்!
Jul 17, 2020
போதைப் பொருள் உட்கொண்டு விட்டும் மது போதையிலும் வாகனமோட்டுவதன் ஆபத்தை மக்களுக்கு எடுத்துரைப்பதில் அனைத்து தரப்பினரும் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
மதுபானம் விற்பவர்களும் அவர்களில் அடங்குவர் என தேசிய சாலைப் பயனீட்டாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் Tuan Haji Zambri Mohd Isa கூறுகிறார்.
“ Pengusaha atau penjual minuman keras ini, mereka juga bertanggungjawab menasihati pelanggan mereka supaya tidak memandu setelah mengambil minuman keras.”
இதனிடையே போதையில் வாகனமோட்டுவோருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க ஏதுவாக, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முன் வைத்துள்ள பரிந்துரையையும் அவர் வரவேற்றார்.
அச்சட்டத் திருத்தத்தின் கீழ் போதையில் வாகனமோட்டுவோருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒன்றரை லட்சம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
தங்களை குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் தரப்பினருக்கு எதிராக SOSMA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய காவல் படைத் தலைவர் அவ்வாறு எச்சரித்துள்ளார்.
நாட்டில் குண்டர் கும்பல் கலாச்சாரத்தை ஒழிப்பதில் தீவிரமாக இருக்கும் காவல் துறை, அவ்விஷயத்தில் அனுசரணை போக்கு காட்டாது என அவர் நினைவுறுத்தினார்.
பிரதமர் அறிவித்த ePenjana திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற மலேசியர்கள் இம்மாதம் தொடங்கி eWallet வாயிலாக 50 ரிங்கிட்டைப் பெறவிருக்கின்றனர்.
அது தொடர்பான மேல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்தது.
ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் eWallet சலுகையைப் பெற தகுதியுள்ளவர்களாவர்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் முழுமையாக வழக்கத்திற்குத் திரும்பியுள்ளது.
KL, Petaling, Shah Alam/Klang, Gombak, Kuala Langatட்டில் பாதிக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளிலும் நிலைமை சீரடைந்திருப்பதாக Air Selangor அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
SSP3 நீர் சுத்திகரிப்பு ஆலையில் பழுது பார்க்கும் மற்றும் தரமுயத்தும் பணிகள் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
ஜொகூர் Muarரிலும் Tangkakக்கிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை மேலும் குறைந்துள்ளது.
நேற்றிரவு 170க்கும் கூடுதலாக இருந்த எண்ணிக்கை தற்போது சுமார் 160 ஆக இருக்கிறது.
மலாக்கா, Jasinனில் ஏறக்குறைய 30 பேர் துயர் துடைப்பு மையத்தில் இருக்கின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather