← Back to list
மீண்டும் களமிறங்குகின்றது தேசிய நட்சத்திரம்!
Jul 16, 2020
கடந்த 15ஆம் தேதி நாடெங்கிலும் தொடுதலை உட்படுத்திய விளையாட்டுகளுக்கான பயிற்சிகளைத் தொடர அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது தேசிய விளையாட்டாளர்களுக்கு ஓர் இனிய செய்தி என்று தான் கூற வேண்டும்!
அந்த வகையில் தாமும் பயிற்சிக்குத் தயார் எனக் கூறியுள்ளார் அனைத்துலக Rugby வீரர் தினேஷ்வரன் கிருஷ்ணன்.
பயிற்சி தானே, அதெல்லாம் அவருக்கு சாதாரணம் என்று நாம் நினைத்தாலும், தமக்கும் சற்று பதட்டமாக இருப்பதை தினேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.
'' ரெண்டு மூனு மாசமா வீட்டிலேயே பயிற்சி செய்தாலும், நம்ப வேகத்துக்கு ஏற்றமாதிரி தான் பயிற்சி செய்வோம். ஆனால் தேசிய அணியுடனான பயிற்சி-னு வரும் போது, கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஏனா பயிற்றுனர்கள் அவுங்களோட வேகத்துக்கு ஈடுகொடுக்க சொல்லுவாங்க. அத நினைக்கும் போது தான் ஒரு மகிழ்ச்சி கலந்து பயமும் உண்டாகுது'' என்றார்.
இதனிடையே தேசிய அணியுடனான பயிற்சி நிச்சயம் வழக்கத்தை விட சற்று சவால் மிக்கதாக இருக்கும் என்பதை சந்தேகமில்லை என அந்த உள்நாட்டு நட்சத்திர ஆட்டக்காரர் தெரிவித்தார்.
'' Contact- இருக்குற பயிற்சி நிச்சயம் கஷ்டமாகதான் இருக்கும், ஏனா வீட்டுல தனியா பன்றதுக்கும் அணியுடன் சேர்ந்து பயிற்சி பன்றதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. ஆனால் ஒரு நல்ல விஷியம் என்ன-னா, வீட்டுலே பயிற்சி செஞ்சி, நம்பல பழக்கப் படுத்திக் கிட்டனால், பழைய வேகத்துக்கு வர்ரது ரொம்ப கஷ்டமா இருக்காது. ''
சரி பயிற்சி இருக்கட்டும், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முழுதும் வேற என்னவெல்லாம் செஞ்சிங்க'', என கேட்கப்பட்ட போது Dugro இவ்வாறு சொன்னார்.
''நான் ஜப்பான் அணியில விளையாடுறதால, அதிகம் மலேசியாவில் பொதுவா இருக்க மாட்டேன். ஒரு வாரம் அந்த மாதிரி தான். அப்படியிருக்க இந்த MCO காலகட்டம் எனக்கு என் குடும்பத்தோடு நிறைய நேரம் செலவு பண்ண ரொம்ப உதவி பன்னுச்சு''.
''அக்கா, அம்மா, அப்பா - னு என் குடும்பத்தோடு நல்ல முறையில் திருப்தியா நேரத்த செலவழிச்சே. முக்கியமா வேறெந்த சிந்தனையும் இல்லாம இருந்தே'' என்றார்.
வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்ளும் நம்ம தினேஷ்-க்கு குட்டி ரசிகர்கள் கூட இருக்காங்கலாம்!
அவர் பயிற்சி மேற்கொள்வதைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ள சிறுவர்களும் அவருடன் இணைந்து கொள்வது வழக்கம் என்றும் அவர் சொன்னார்.
இதற்கு முன் தமக்கு ஏற்பட்ட காயங்களிலிருந்து முழுமையாக மீண்டு வரவும் இந்த MCO காலகட்டம் தமக்குப் பயன்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
ஜப்பானிய அணியான Hino Red Dolphinsசின் கீழ் விளையாடும் தினேஷ், விரைவில் பயிற்சிக்காக அந்நாட்டிக்குத் திரும்பலாம் என்றும் கோடி காட்டினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather