← Back to list
நீங்க பயந்தது போல எதுவும் நடக்கவில்லை; இப்போ என்ன சொல்றிங்க?
Jul 16, 2020
கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் முடி திருத்தும் நிலையங்களை மீண்டும் திறப்பதால், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பலரும் பயந்தனர்.
ஆனால் அப்படியொரு அசம்பாவிதம் நடக்கவில்லை.
அந்நிலையானது, அரசாங்கத்தின் தர செயல்பாட்டு நடைமுறையை சரிவர பின்பற்றிய தமது தரப்புக்குக் கிடைத்த பரிசு என்றே தாம் கருதுவதாகக் மலேசிய இந்திய சிகையலங்கரிப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் துணை பொருளாலர் மீனாக்குமார் மூர்த்தி கூறியுள்ளார்.
'' Cluster வரும்னு, எல்லாரும் பயந்தாங்க. அதே சமயம் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்த SOPக்களும் ரொம்பவே கடுமையா இருந்தது. கடுமையா இருந்தாலும் அது பாதுகாப்பு அம்சங்கள் நிறைஞ்சு இருந்தது. அப்படிப்பட்ட SOPக்களைப் பின்பற்றி வந்ததால தான், எங்களுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைச்சுருக்கு-னு நான் நம்புறேன்'' என்றார்.
இந்த வெற்றிக்கு வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு உதவியது என வினவப்பட்டபோது, மீனாக்குமார் கூறியதாவது,
''நிச்சயமா. வாடிக்கையாளர்கள் எல்லாரும் நம்ப சொல்ற விஷியங்கள கேட்டு நடந்துகுறாங்க. சுவாசக் கவசம் அணிய சொன்னோம், செஞ்சாங்க, ஒரு மீட்டர் தள்ளி இருக்கனும்னு சொன்னோம், அதையும் செஞ்சாங்க, எந்த வகையிலும் SOPயை அவங்க மீறவே இல்ல. எங்களுக்கு முழுக்க முழுக்க ஒத்துழைப்பு குடுத்த வாடிக்கையாளர்களுக்கு இந்த வேளைல நான் நன்றி சொல்லியே ஆகனும்.''
அதே வேளை முடி திருத்தும் நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதித்த அரசாங்கத்திற்கும் தமது தரப்பு நன்றி தெரிவித்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
'' எல்லா துறைகளையும் சீக்கிரமாகவே திறக்க அரசாங்கம் அனுமதி கொடுத்தது. என்னடா இது நம்ம துறைக்கு மட்டும் இவ்வளவு தாமதமாகுதேனு முதல்ல வருத்தப் பட்டோம். ஆனா இப்படி உச்சகட்ட பாதுகாப்ப உறுதிபடுத்துவதற்கான SOPக்களை தயார் செய்ய தான் இவ்வளவு தாமதம் ஆச்சு-னு எங்களுக்கு பிறகு தான் தெரிஞ்சது.''
முடி திருத்தும் நிலையங்களைத் திறக்க அரசாங்கம் அனுமதி அளித்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், அதன் காரணமாக நாட்டில் எந்த Covid-19 பரவலும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி மீனாக்குமார் அக்கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather