Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மக்களவையின் புதிய சபாநாயகர்- துணை சபாநாயகர்!

Jul 13, 2020


Datuk Azhar Azizan Harun மக்களவையின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேறெவரும் முன் மொழியப்படாததால் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் Azhar Harun அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

தேர்தல் ஆணையம் SPRரின் முன்னாள் தலைவருமான அவர், சபாநாயகராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

முன்னதாக இதற்கு முன் அப்பொறுப்பில் இருந்த Tan Sri Mohamad Ariff Md Yusofவை விடுவிக்கும் தீர்மானத்தை பிரதமர் Tan Sri Muhyiddin Yassin மக்களவையில் தாக்கல் செய்தார்.

பெரும் அமளி துமளிக்கு மத்தியில் அத்தீர்மானத்திற்கு 111 பேர் ஆதரவு கொடுத்து, 109 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதியில் இரண்டே ஓட்டுகள் வித்தியாசத்தில் சபாநாயகர் பொறுப்பு காலியானது.

இவ்வேளையில் தாமாகவே முன் வந்து பொறுப்பில் இருந்து விலகியுள்ள Nga Kor Mingங்கிற்கு பதிலாக Datuk Seri Azalina Othman Said துணை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Azalina துணை சபாநாயகரான முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை மீண்டும் நாளை ஒன்று கூடுகிறது.

Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 7 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனை அடுத்து இதுவரை பதிவாகியுள்ள மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 725 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.

83 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக மரணம் ஏதும் பதிவாகாததால் மரண எண்ணிக்கை 122 ஆகவே உள்ளது.

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஐவர் தடுத்து வைக்கப்பட்டு, 32 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு கூறியிருக்கிறது.

இதனிடையே நேற்று 793 பேர் நாடு திரும்பியதாகவும் அமைச்சு தெரிவித்தது.

அவர்களில் அறுவருக்கு Covid-19 கிருமித் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன; மற்றவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டனர்.

Covid-19னை எதிர்கொள்வதில் தொடர்ந்து கூட்டு ஒத்துழைப்பை மேற்கொள்ள மலேசியாவும் சிங்கப்பூரும் இணக்கம் கண்டுள்ளன.

அவ்விணக்கம் குறித்த அறிக்கையை வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்டது.

அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞர் Datuk Anthony Kevin Morais கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை எதிர்த்து அறுவர் மேல் முறையீடு செய்துள்ளனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன் 55 வயது Kevin Moraisசைக் கொலை செய்ததில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு அந்த அறுவருக்கும் கடந்த வாரம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

-----

KL, Kepongங்கில் சுயச் சேவை சலவைக் கடையில், மூன்றுப் பூனைகளை சலவை இயந்திரத்திற்குள் போட்டுக் கொன்றதாக நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather