← Back to list
பள்ளிகள் திறப்பு!
Jul 15, 2020
நாடு முழுவதும் இன்று ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கும் ஒன்றில் இருந்து நான்காம் படிவம் மற்றும் கீழ்நிலை ஆறாம் படிவ மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் பதற்றமடையவோ அச்சப்படவோ அவசியம் இல்லை என கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு PAGEசின் கௌரவச் செயலாளர் Tunku Munawirah Putra கூறுகிறார்.
“Many parents are worried and feeling anxious over sending their children to school, but again we cant be overly paranoid. but hope for the best. it is recommended that parents send and fetch their children themselves and not depend on transports that would be hard to keep the social distancing with the limited space."
இடைப்பள்ளிகளில் முக்கியத் தேர்வுகளுக்கு அமரும் ஐந்தாம் மற்றும் மேல் நிலை ஆறாம் படிவ மாணவர்களுக்கு கடந்த மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன.
ஒன்றில் இருந்து நான்காம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த புதன்கிழமை ஜூலை 22 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பெரும்பாலான மாணவர்களுக்குப் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்தும் சீராக இருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்திருக்கிறது.
அரசாங்கம் நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOP முறையாகப் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அது கூறியது.
சுவாசக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க தற்போதைக்கு எண்ணமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
அதனைக் கட்டாயமாக்கினால், அவ்வாறு செய்யத் தவறுவோருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.
"Kalau kita menjadikan dia mandatory, maksudnya mereka yang tidal pakai akan didenda 1,000 ringgit kale tak boleh bayar dente akan mask penjara, jadi kita tak nak menggunakan kaedah tersebut tapi kita sangat mengalakkan pemakaian mask terutama di khlayak awam ataupun kalau kita ada gejala kita digalakkan memakai mask"
பிரான்ஸ், வியட்னாம் உள்ளிட்ட 50க்கும் அதிகமான நாடுகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சுவாசக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் இன்று காலை தொடங்கி கட்டங் கட்டமாக வழக்கத்திற்குத் திரும்பும் என Air Selangor கூறியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் நீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SSP3 நீர் சுத்திகரிப்பு ஆலையில் பழுதுபார்க்கும் மற்றும் தரமுயர்த்தும் பணிகள் முழுமையடைந்து விட்டதாக Air Selangor ஏற்கனவே அறிவித்திருந்தது.
நாட்டில் ஜொகூர், மலாக்கா, பஹாங், சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களில் தொளாயிரத்து 50க்கும் மேற்பட்டோர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜொகூரில் மிக அதிகமாக சுமார் 740 பேர் நிவாரண மையங்களில் இருக்கின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather