← Back to list
மக்களவை துணை சபாநாயகரான முதல் பெண்!
Jul 14, 2020
மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் மக்களவை துணை சபாநாயகரான முதல் பெண்ணாக Datuk Seri Azalina Othman Said திகழ்கின்றார்!
தமது நியமனம் குறித்து பேசிய Azalina, பாலின பாகுபாடு இன்றி பெண்களும் நாட்டின் முக்கியப் பொறுப்புகளை ஏற்கலாம் என்பதை அது உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.
நேற்று, அப்பதவியில் இருந்து Nga Kor Ming-கை விடுவிக்கச் செய்யும் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பதாகவே, அந்த Teluk Intan MP பதவி விலகியதை அடுத்து அப்பொறுப்பு காலியானது.
இதையடுத்து, Azalina-வை துணை சபாநாயகராக நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் Tan Sri Muhyiddin Yassin முன்வைத்த நிலையில், Azalina போட்டியின்றி அப்பொறுக்கு தேர்வானார்.
இதற்கு முன் மேலவை துணை சபாநாயகர்களாக பெண்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Adib மரணம்: IGP விளக்கம்!
2018ஆம் ஆண்டு தீயணைப்பு வீரர் Muhammad Adib தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மரண விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தேசிய காவல் படை செயல்படுவதாக கூறப்படுவதை IGP Tan Sri Abdul Hamid Bador மறுத்துள்ளார்.
Adib-புடன் மிக அருகில் இருந்ததாக கூறப்படும் இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட யாருமே Adib தாக்கப்பட்டதை நேரில் பார்த்ததாக இதுவரை சாட்சியம் கூறவில்லை என்பதே உண்மை என IGP தெரிவித்துள்ளார்.
எனினும், ஒருவேளை Adib தாக்கப்பட்டது உண்மை தான் என்றால், குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றாரவர்.
மரண விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் விதமாக, விசாரணை இன்னமும் முடித்துக் கொள்ளப்படவில்லை; தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
2019ஆம் ஆண்டு மரண விசாரணை நீதிமன்றம் வெளியி்ட்ட தகவலில், Adib, 2 அல்லது அதற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியிருந்தது.
தண்ணீர் விநியோகத் தடை!
கிள்ளான் பள்ளத்தாக்கில் 4 நாட்கள் தண்ணீர் விநியோகத் தடை இன்று காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
Sungai Selangor நீர் சுத்திகரிப்பு ஆலையில் மேற்கொள்ளப்பட்டவுள்ள பராமரிப்பு பணிகளை அடுத்து, Petaling, Klang, Gombak, Kuala Langat, KL ஆகிவற்றை உட்படுத்தி, ஏறக்குறைய 300 இடங்கள் இதனால் பாதிக்கப்படும்.
ஜூலை மாத இறுதி வரை மழை!
நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை, இம்மாத இறுதி வரை நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
இதனிடையே, நேற்று தீபகற்பத்தில் நெகிரி செம்பிலான், பகாங், ஜொகூர், சிலாங்கூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் சில இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
அவற்றில் கிட்டத்தட்ட ஆயிரத்து 600 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் வேலைக்கு திரும்பும் மலேசியர்கள்!
COVID-19 பெருந்தொற்றை அடுத்து சிங்கப்பூரில் தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஏறக்குறைய 75 விழுக்காட்டு மலேசியர்கள், மீண்டும் வேலைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் அந்நாட்டிலுள்ள சில முக்கிய துறைச் சார்ந்த முதலாளிகளுடனான பேச்சு வார்த்தையின் பலனாக அவ்வாய்ப்பு அமைந்துள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Mohd Izhar Ahmad தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 10 விழுக்காட்டினர் சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பவில்லை என முடிவெடுத்திருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே, நாட்டில் மேலும் ஏழு புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன; ஒருவர் அத்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
இன்னும் ஏறக்குறைய 83 பேர் அக்கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!
சிலாங்கூரில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்தப் பிறகு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அக்காலக்கட்டத்தில் ஏறக்குறைய 90 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாக மாநில அரசு கூறியது.
பாதிக்கப்படும் பெண்கள், தங்களது உரிமையை அறிந்து, உடனடியாக உதவியை நாடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக நிலவரம்!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் நான்காயிரத்து 328 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருப்பதாக தகவல் கூறுகின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather