← Back to list
தேர்வுகளுக்குப் பச்சைக் கொடி!
Jul 12, 2020
பள்ளிகளில் தேர்வுகளை நடத்த கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அமைச்சின் ஆண்டு குறிப்பேடுக்கேற்றாற் போல், தேர்வுக்கான அட்டவணைகளைத் தயார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளை தற்காப்பு அமைச்சர் Dato Sri Ismail Sabri Yakob கேட்டுக் கொண்டார்.
பள்ளியில் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென் பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி ததேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே அரசாங்க தேர்வெழுதும் மாணவர்களிடத்தில் அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மாநில சுகதாராத் துறையின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் சொன்னார்.
______
நாட்டில் Covid-19னால் மேலும் ஓர் உயிர் பலியாகியிருக்கின்றது.
ஆகக் கடைசியாக நேற்று 72 வயது முதியவர் ஒருவர் அத்தொற்றால் உயிரிழந்துள்ளதை சுகாதர அமைச்சு உறுதிபடுத்தியது.
இதையடுத்து மலேசியாவில் Covid-19 மொத்த மரண எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் புதிதாக எட்டு சம்பவங்கள் பதிவு தசெய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை எண்ணாயிரத்து எழுநூற்று நான்காக இருக்கின்றது.
_______
வருகின்ற செவ்வாய்க்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்படவுள்ள தண்ணீர் விநியோகத் தடையைச் சமாளிக்க பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும்!
குறிப்பாக சுத்தத்தைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார வல்லுனர்கள் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் Covid-19 பரவலைத் தடுக்க ஏதுவாக சுத்தத்தைப் பேணுவது சற்று கடினம் தான் :
ஆனாலும், hand sanitizer திரவத்தைப் பயன்படுத்துதல், உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்தும் வகையிலான தட்டு மற்றும் குவளைகளைப் பயன்படுத்துதல் போன்றவை கிருமி பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் கூறுகின்றனர்.
________
மலாக்கா, மற்றும் KLலில் கோழியை அதிக விலைக்கு விற்றது தொடர்பில் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு எட்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்ட போது அந்த வியாபாரிகள் கோழியை அதிக விலைக்கு விற்று வந்தது அம்பலமானதாக அவ்வமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குனர் தெரிவித்தார்.
_________
கிளாந்தான் Gua Musangகில் நேற்று நான்கு மணி நேரம் இடைவிடாது பெய்த மழையை அடுத்து, அங்குள்ள 10 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இப்போதைக்கு தற்காலிக துயர் துடைப்பு மைய்யங்கள் ஏதும் திறக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட அனைவரும் அருகாமையிலுள்ள தத்தம் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
_______
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather