Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உள்நாட்டில் பரவல் இல்லை!

Jul 09, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் இன்று மேலும் ஆறு புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உள்நாட்டில் அக்கிருமித் தொற்று பரவல் இல்லை.

அக்கிருமித் தொற்றுக்கு இதுவரை ஆளானவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் அவர்களில் 63 பேர் மட்டுமே இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 13 பேர் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக மரணம் ஏதும் பதிவாகாததால், மரண எண்ணிக்கை 121 ஆகவே இருக்கிறது.

நாட்டில் வேலையிடங்களில் பதிவு செய்யப்பட்ட 11 cluster சம்பவங்கள் முடிவுக்கு வந்து விட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

இன்னும் நான்கு cluster சம்பவங்கள் முடிவுக்கு வரவில்லை.

Covid-19னை எதிர்கொள்வதில் மலேசியர்கள் வெளிப்படுத்தி வரும் ஒற்றுமை உணர்வு தம்மை பிரமிக்க வைப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வந்தால் அப்பெருந்தொற்றைத் துடைத்தொழிக்க முடியும் என Tan Sri Muhyiddin Yassin நம்பிக்கை தெரிவித்தார். 

"Perpaduan saudara saudari yang telah membolehkan kerajaan menguruskan wabak ini antara yang terbaik di dunia, tanpa mengira kaum, warna kulit, status social sama-sama membantu melindungi untuk mengatasi krisis ini"

அதே சமயம், இந்த ஒற்றுமை உணர்வு தொடர்ந்து உறுதியாக இருந்தால், நாடு எதிர்நோக்கி வரும் நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என்றாரவர்.

SOPயைப் பின்பற்றி வாகனங்களில் இருந்து திரைப்படங்களைக் கண்டு களிக்கும் Drive-in cinemaவுக்கு அரசாங்கம் அனுமதி வழங்குகிறது.

பொதுமக்கள் தத்தம் வாகனங்களிலேயே இருக்க வேண்டும்; உணவு வாங்க விரும்புவோர் drive-thru மூலமே அவ்வாறு செய்ய முடியும்.

அதே சமயம் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க RELA உறுப்பினர்களும் பணியமர்த்தப்பட வேண்டும் என தற்காப்பு அமைச்சு கூறியது.

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக காவல் துறை நேற்று 11 பேரைக் கைது செய்து அபராதம் விதித்தது.

Op Benteng சோதனையில் குடிநுழைவு தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்ட பத்து அந்நிய நாட்டவர்கள் கைதாகினர்.

தேர்தல் ஆணையத் தலைவர் பொறுப்பில் இருந்து Datuk Azhar Azizan Harun விலகியிருப்பதை SPR உறுதிப்படுத்தியிருக்கிறது.

எனவே புதிய தலைவர் தேர்தெடுக்கப்படும் வரை துணைத் தலைவர் Dr Azmi Sharom தலைவர் பொறுப்புகளை கவனித்து வருவார் என SPR அறிக்கையொன்றின் வழி கூறியது.

சிலாங்கூர், Rawangங்கில் Datuk Seri பட்டத்தைக் கொண்ட வர்த்தகர் ஒருவர் கொலையுண்டது தொடர்பில் இன்று அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அச்சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 11 பேரில் அவர்களும் அடங்குவர்.

Kajang MRT வழித்தடத்தில் உள்ள Sungai Buloh, Kampung Selamat, Kwasa Damansara ஆகிய மூன்று நிலையங்களும் இம்மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை ஆறு வாரங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படவுள்ளன.

தட மாற்றுப் பணிகளுக்காக அவ்வாறு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க Kelana Jaya LRT வழித்தடத்தில் புதிதாக 27 ரயில்கள் பயணச் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக Prasarana அறிவித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather