← Back to list
COVID-19: குடும்பத்தில் பரவியதாக சம்பவம் இல்லை!
Jul 08, 2020
வெளிநாடுகளில் இருந்து திரும்பி சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாயிலாக, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு COVID-19 கிருமித் தொற்றுப் பரவியதாக இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை.
அந்நடவடிக்கை அமுலுக்கு வந்ததில் இருந்து தற்போது வரை அப்படி எந்த சம்பவமும் ஏற்படவில்லை என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி தொடங்கி, வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர், சொந்த வீடுகளில் 14 நாட்களுக்கு சுயமாக தங்களை தனிமைப்படுத்துக் கொள்ளும் முறை அமுலுக்கு வந்தது.
நாட்டில் நேற்றுப் புதிதாக 6 சம்பவங்கள் மட்டுமே பதிவான வேளை, ஐவர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இன்னும் 72 பேர் கொரோனா கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேற்று 23 ஆவது நாளாக கொரோனா மரணம் எதுவும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீட்டில் சுகாதார சேவைகள்!
சுகாதார சேவைகளை வீட்டிலேயேப் பெறுவதற்கான இணையம் வழி முன்பதிவுச் செய்யும் முறையை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
குறிப்பாக, ரத்தப் பரிசோதனை, அவசரமில்லாத வெளிநோயாளிகளுக்கான சேவை, குறிப்பிட்ட காயங்களுக்கான பராமரிப்பு சேவை ஆகியவற்றை அது உட்படுத்தியிருக்கும் என அமைச்சு தெரிவித்தது.
மாதந்தோறும் வீட்டில் சிகிச்சைப் பெற விரும்புவதாக கூறி பொது மக்களிடம் இருந்து அதிகமான கோரிக்கைகள் பெறப்பட்டு வருவதை அடுத்து, இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு கூறியது.
சேவைகளை பொறுத்து அதற்கான கட்டணம் அமையும் என அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவில் தடுப்பூசி சோதனை!
கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் Covaxin தடுப்பூசி, இரண்டு கட்டங்களாக ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்டப் பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தடுப்பூசியின் பலனைப் பொறுத்து, அது ஆகஸ்ட் 15ஆம் தேதி பொது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், தமிழகத்தில் நேற்று மூவாயிரத்து 616 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதியான வேளை, நான்காயிரத்து 545 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Brazil அதிபருக்கு கொரோனா!
தனது கொரோனா கிருமித் தொற்று இல்லை எனக் கூறி மறுத்து வந்த Brazil அதிபர் Jair Bolsonaro-வுக்கு, 4ஆவது பரிசோதனையில் அத்தொற்று உறுதியாகியிருக்கின்றது.
இதையடுத்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தொடங்கவுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather