Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தொடர்ச்சியாக 23 நாட்களாக மரணம் இல்லை!

Jul 07, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் கடந்த 23 நாட்களாக புதிதாக மரணம் ஏதும் பதிவாகவில்லை.

மொத்த மரண எண்ணிக்கை 121 ஆகவே இருக்கிறது.

ஓரிலக்க எண்ணாக புதிதாக ஆறு சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

மேலும் ஐவர் பூரண குணமடைந்திருப்பதை அடுத்து இதுவரை நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை  எண்ணாயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.

அது கிட்டதட்ட 98 விழுக்காடாகும். 

மக்களவைக் கூட்டம் வரும் 13 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு நடைபெறும்.

மேலவை செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும் என தற்காப்பு அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தின் போது அனைவரும் சுவாசக் கவசம் அணிந்திருக்க வேண்டியது, ஒரு மீட்டர் தூரத்தில் அமருவது, கிருமி நாசினித் திரவம் தயார் செய்து வைக்கப்பட்டிருப்பது ஆகியவை தர செயல்பாட்டு நடைமுறை SOPயின் கீழ் புதிய வழமைகளாகக் கொண்டு வரப்பட்டுள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது கள்ளக் குடியேறிகளை மலேசியா கையாண்ட விதம் குறித்து அனைத்துலக செய்தி நிறுவனமொன்று வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் காவல் துறையில் ஐந்து புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அதன் தொடர்பிலான விசாரணைக்கு உதவ சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக Bukit Aman கூறியது.

வாகனங்களின் பின் இருக்கையில் அமருவோர் வார்ப்பட்டையை அணிந்துள்ளனரா என்பதை உறுதிச் செய்ய வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சோதனை நடத்தவிருப்பதாகக் கூறப்படுவதை Bukit Aman மறுத்துள்ளது.

உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம். 

பிற செய்திகள்..... 

Johor Bharuவில் கள்ளக் குடியேறிகள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 18 அரசு ஊழியர்களை உட்படுத்திய விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-----

சிலாங்கூர், Klang Sentral அருகே எதிர்த்திசையில் வாகனமோட்டிய வெள்ளை நிறக் கார் ஓட்டுனரை காவல் துறை தேடி வருகிறது.

----- 

KLலில் தனது அண்டை வீட்டுக்காரரின் 10 மாத ஆண் குழந்தையின் காதுகளைத் திருகி அவை வீங்கக் காரணமாக இருந்த இல்லத்தரசி ஒருவருக்கு ஆறாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

----- 

நாட்டின் பாதுகாப்புக்கு மருட்டலாக இருப்பதாகக் கூறி Tik Tok உட்பட மேலும் சில சீன சமூகவளைத் தள செயலிகளுக்குத் தடை விதிக்க அமெரிக்கா எண்ணியிருக்கிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather