Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உயர்க்கல்விக் கழகங்கள் திறக்கப்படுகின்றன!

Jul 08, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 3 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் ஐவர் பூரண குணமடைந்துள்ளதை அடுத்து இதுவரை மொத்தமாக அக்கிருமித் தொற்றில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக மரணம் ஏதும் இல்லை.

மொத்த மரண எண்ணிக்கை 121 ஆகவே இருக்கிறது.

இவ்வேளையில், Sri Petaling kluster சம்பவம் முடிவுக்கு வந்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.  

இம்மாதம் தொடங்கி மேலும் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கட்டங் கட்டமாக தத்தம் உயர்க்கல்விக் கழகங்களுக்குத் திரும்ப அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அக்டோபர் மாதம் வாக்கில் அனைத்து மாணவர்களும் தத்தம் உயர்க்கல்விக் கழகங்களில் மேல் கல்வியைத் தொடர இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்விக் கல்வி அமைச்சர் Dato Dr. Noraini Ahmad கூறினார்.

அரசாங்கம் ஏற்கனவே ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள்,  விரைவுரையாளர்கள், உயர்க்கல்விக் கழக மாணவர்கள் ஆகியோருக்கு உள்நாட்டுப் பயணங்களுக்கு 20 விழுக்காடு டிக்கெட் விலைக் கழிவு வழங்க உள்நாட்டு விமான நிறுவனமொன்று முன் வந்துள்ளன.

அடுத்த வாரம் 15 ஆம் தேதி தொடங்கி பள்ளிகள் கட்டங் கட்டமாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அந்நிறுவனம் வரும் நவம்பர் மாதம் வரை அச்சலுகை வழங்குவதாக தற்காப்பு அமைச்சர் கூறினார்.

அந்நிறுவனத்தைப் போல் பிற உள்நாட்டு விமான நிறுவனங்களும் விலைக் கழிவு கொடுக்க முன் வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களது துணை மலேசியராக இருக்கும் பட்சத்தில், அவசரத் தேவைக்காக நாட்டிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இருப்பினும் அவர்கள் Spouse visa வைத்திருக்க வேண்டும்; அல்லது அதற்கு குடிநுழவுத்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும் என Datuk Seri Ismail Sabri Yaakob சொன்னார்.

“Tetapi kalau mereka tidak mempunyai spouse visa, mereka masih boleh memohon kepada Jabatan Imigresen kalau ada kematian atau ada yang sakit, dan kemukakan bukti, tunjukkan bukti kepada Jabatan Imigresen, insyallah imigresen membenarkan”

ஆவணப்படம் தொடர்பிலான விசாரணைக்காக அனைத்துலக செய்தி நிறுவனமொன்றின் நிர்வாகத் தரப்பையும் செய்தியாளரையும் Bukit Aman இவ்வாரம் விசாரணைக்கு அழைக்கவிருக்கிறது.

அந்த ஆவணப்படம் Covid-19 பரவலைத் தடுக்கும் முயற்சியில் கள்ளக் குடியேறிகளை மலேசிய அரசு கையாண்ட விதம் தொடர்பிலானது. 

பினாங்கு, Butterworthத்தில் உள்ள Bagan Dalam பள்ளிவாசலில் புதிதாக Covid-19 cluster சம்பவம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக் கூறி WhatsApp வாயிலாக தகவல் பரப்பிய நபரை காவல் துறை தேடி வருகிறது.

அத்தகவல் உண்மையில்லை என அது தெளிவுபடுத்தியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather