← Back to list
Bank Negaraவும் நிதியமைச்சும் வலியுறுத்த வேண்டும்!
Jul 05, 2020
வங்கிக் கடன்களுக்கானத் தவணைப் பணத்தைச் செலுத்துவதை ஒத்தி வைக்க வழங்கப்பட்ட ஆறு மாத காலச் சலுகையை நீட்டிக்குமாறு உள்நாட்டு வங்கிகளை Bank Negaraவும் நிதியமைச்சும் வலியுறுத்த வேண்டும்.
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் MTUC தனது அக்கருத்தை வெளியிட்டுள்ளது.
Covid-19 பரவல் தாக்கத்தில் இருந்து மலேசியர்களில் பலர் இன்னும் மீளவில்லை.
அச்சலுகை நீட்டிக்கப்படாவிட்டால், சிலர் தங்களது வாகனங்களையும் வீடுகளையும் இழக்க நேரிடலாம் என அது சுட்டிக் காட்டியது.
அச்சலுகை நீட்டிக்கப்படாது என Bank Negara அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
அச்சலுகையை நீட்டிப்பது வங்கிகளைப் பொருத்தது என நிதியமைச்சு கூறியிருந்தது.
நேற்று பஹாங், Chini சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது ஆறு வாக்காளர்களுக்கு Covid-19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.
வாக்களிப்பு மையத்தின் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு பின்னர் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்றைய அவ்விடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் Mohd Sharim Md Zain இரு சுயேட்சை வேட்பாளர்களை வீழ்த்தினார்.
நாட்டில் தற்போதைக்கு எல்லை கடந்த புகை மூட்டப் பிரச்னை இருக்காது என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்திருக்கிறது.
இந்தோனேசியா, Kalimantanனிலும் சுமத்ராவிலும் 15 வெப்பப் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும் நாடு முழுவதும் இதுவரை காற்றின் தரம் நல்ல நிலையிலும் மிதமான நிலையிலுமே இருப்பதாக அத்துறை கூறியது.
மது போதையில் வாகனமோட்டுவோரைக் கையாள நடப்பில் உள்ள சட்டங்களில் திருத்தம் செய்வது தொடர்பான சில விஷயங்களை தேசிய சட்டத்துறை அலுவலகம் இறுதிச் செய்து விட்டது.
மது அல்லது போதைபொருள் போதையில் வாகனமோட்டுவோருக்கு மேலும் கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather