← Back to list
சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!
Jul 07, 2020
நாட்டில் COVID-19 சம்பவங்கள் குறைந்து வரும் நிலவரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு மலேசியர்களை எச்சரித்திருக்கின்றது.
அக்கோறனி நச்சில் தொற்று சங்கிலியை முறியடிக்க அனைத்து SOP-களையும் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah நினைவுறுத்தியிருக்கின்றார்.
“It is not impossible for us to bring down the cases but we need to comply to our SOP. we have seen from other countries, they managed to control but the moment they ease and relax and do not comply to the SOP the cases or Covid-19 can actually come back so it is important for us to comply to our SOP's"
நேற்று நாட்டில் 5 புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவான வேளை, 11 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.
71 பேர் மட்டுமே அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து 22 நாட்களுக்கு கொரோனா கிருமித் தொற்றை உட்படுத்திய மரணங்கள் பதிவாகவில்லை என்பதையும் Dr Noor Hisham சுட்டிக் காட்டினார்.
பள்ளிவாசல் Cluster சம்பவம் விரைவில் முடிவுக்கு வரும்!
மற்றொரு நிலவரத்தில், Sri Petaling பள்ளிவாசல் நிகழ்வை உட்படுத்திய கொரோனா Cluster சம்பவம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் தொடர்பில் புதிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனக் கூறிய சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah, அந்த Cluster-ரை உட்படுத்திய ஒரு சம்பவம் மட்டுமே நடப்பில் இருப்பதையும் குறிப்பிட்டார்.
"Kita harap dalam masa yang terdekat mungkin dal am tempo seminggu due kita akan tamatkan pengawasan dan pemantauan kluster ini, ini merupakan satu kejayaan kerjasama sepadu antara kementeriaan dan juga agensi-agensi lain melakasanakan tindakan untuk mengesan mereka.”
அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம்!
மலேசியா - சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறக்கும் விவகாரம் மீதான கலந்துரையாடல் நீடிக்கின்றது!
தினமும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று திரும்பும் மலேசியர்கள், அங்கேயே தங்கியுள்ள மலேசியர்கள் என பல்வேறு தரப்பினரை உட்படுத்தியிருப்பதால், அவ்விவகாரம் கவனமாக கையாளடப்பட வேண்டியிருப்பதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மலேசிய - சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறப்பது மீதான முடிவு அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
காவல் துறை வீடு தேடி வரும்!
வெளிநாடுகளில் இருந்து திரும்பி, சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஏறக்குறைய 400க்கும் அதிகமானோர் COVID-19 கிருமித் தொற்றுக்கான 2ஆவது கட்டாயப் பரிசோதனையை இன்னும் மேற்கொள்ளவில்லை.
அப்பரிசோதனைக்குச் செல்ல மறுப்போரை காவல் துறை அடையாளம் காணும் என, தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
"Kalau 414 ni masih lagi belum tampil, Insyallah, pihak polis akan ke rumah mereka untuk membantu mereka, untuk pergi ke klinik-klinik kesihatan dan sebagainya"
இவ்வேளையில், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சியை Wisma Putra மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் சொன்னார்.
"Kementerian Luar Negeri atau Wisma Putra telah mengenalpasti 10,484 rakyat Malaysia yg terkandas serta berpotensi terkandas si luar negara"
மற்றொரு நிலவரத்தில், COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், மலேசியா கள்ளக்குடியேறிகளை மோசமாக நடத்தியதாக கூறி, அடிப்படையற்ற தகவல் வெளியிட்ட அனைத்துலக தொலைக்காட்சி நிறுவனமொன்று, தனது அச்செயலுக்காக மலேசியாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு கூறியிருக்கின்றார்.
கள்ளக் குடியேறிகளின் பிள்ளைகளை தடுப்பு மையங்களுக்கு கொண்டுச் செல்லும் போது, அந்த சிறார்கள் கைவிலங்கிடப்படுவதாக கூறி அந்நிறுவனம் வெளியிட்ட தகவலையும் அமைச்சர் சாடினார்.
உண்மையில் அச்சிறார்கள் கைவிலங்கிடப்படவில்லை; அதே சமயம், தடுப்பு மையங்களில் உள்ள மற்ற கள்ளக்குடியேறிகளுடன் அல்லாமல், அவர்கள் தத்தம் பெற்றோர்களுடன் தனிமைப்படுத்தி வைக்கப்படுவதாகவும் Datuk Seri Ismail Sabri தெளிவுப்படுத்தினார்.
பிரதமர் வேட்பாளரை அறிவித்தது Pakatan Harapan!
Tan Sri Ariff Yusuf மற்றும் Nga Kor Ming ஆகிய இருவரும் முறையே, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானத்தை நம்பிக்கைக் கூட்டணி நிராகரிக்கும்.
இன்றைய நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வேளையில், நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக Datuk Seri Anwar Ibrahim-மையே முன்நிறுத்துவது என்ற தங்களது முந்தைய நிலைப்பாட்டில் PH இன்னமும் உறுதியாக இருக்கின்றது.
Datuk Seri Shafie Apdal-லை பிரதமர் வேட்பாளராக கொண்டு வரும் பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்ட போதும், தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என PH தலைவர்கள் மன்றம் அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
தண்ணீர் விநியோக தடை!
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஏறக்குறைய 4 நாட்களுக்கு, Petaling, கிள்ளான், Gombak, KL மற்றும் Kuala Langat-டை உட்படுத்தி, ஏறக்குறைய 300 பகுதிகளில் தண்ணீர் விநியோகத் தடை ஏற்படும் என Air Selangor நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீர் சுத்திகரிப்பு ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதே அதற்கு காரணம்.
இவ்வேளையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொள்கலன்கள் வசதி ஏற்படுத்தி தரப்படும் என Air Selangor நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவுத் தலைவர் Abas Abdullah தெரிவித்தார்.
"Air selangor akan menyediakan pusat khidmat setempat ataupun PKS, yang akan mengurus bantuan bekalan air melalui lori tanker, di samping itu, Air Selangor juga akan menyediakan pili pili awam di lokasi yang telah disenaraikan di hebahan dan sebanyak 91 lori tangki air akan digerakkan di kawasan kawasan ini."
இக்காலக்கட்டத்தில் தண்ணீரை சேமித்து வைத்து, விவேகமான முறையில் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ரஷ்யாவை முந்தியது இந்தியா!
உலகில் கொரோப் பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ரஷ்யாவை முந்தி, 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 7 லட்சம் கொரோனா சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றது; ரஷ்யாவில் அவ்வெண்ணிக்கை 6 லட்சத்து 81 ஆயிரமாக இருக்கின்றது.
அப்பட்டியலில் அமெரிக்காவும், Brazil-லும் முன்னணி வகிக்கின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather