← Back to list
இன்னும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஈரிலக்கத்திற்குக் குறைந்துள்ளது!
Jul 02, 2020
நாட்டில் Covid-19 கிருமித் தொற்றுக்காக இன்னமும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஈரிலக்க எண்ணிற்குக் குறைந்துள்ளது.
இன்னும் 85 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 62 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக மூன்று சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மரண எண்ணிக்கை 121 ஆகவே நீடிக்கிறது.
தத்தம் இருப்பிடங்களில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டவர்களில் 620 பேர் இரண்டாவது முறையாக Covid-19 தொற்றுக்கான பரிசோதனையை இன்னும் செய்யவில்லை.
அவர்கள் சுகாதார அமைச்சைத் தொடர்பு கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தற்காப்பு அமைச்சு எச்சரித்தது.
வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய மலேசியர்கள், வீட்டில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்ட 13 ஆவது நாளில் இரண்டாவது முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
நாடு முழுவதும் சமூக மேம்பாட்டுத்துறை KEMASசின் கீழ் இயங்கும் பாலர் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களில் சுமார் 36 விழுக்காட்டினர் மட்டுமே மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
பாலர் பள்ளிகள் திறக்கப்பட்ட நேற்று முதல் நாளில் 80 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குச் சென்றதாக KEMAS கூறியது.
Covid-19 அச்சம் காரணமாக பெற்றோர்களில் பலர் தங்களது பிள்ளைகளை பாலர் பள்ளிகளுக்கு அனுப்பத் தயக்கம் காட்டுவதாகவும் அது தெரிவித்தது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மின்சாரக் கட்டணம் அதிகமாக இருந்ததால் மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் அறிமுகப்படுத்திய Bantuan Prihatin Elektrik உதவித் திட்டத்தின் கீழ் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு வழங்கப்படும் சலுகை விவரங்கள் ஜூலை மாதத்திற்கான கட்டண அறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.
மீட்டர் கணக்கு எடுக்கப்பட்ட ஏழு நாட்களில் அஞ்சல் வழி இம்மாதக் கட்டண ரசீதுடன் அந்த அறிக்கை சேர்த்து அனுப்பப்படும் என TNB தெரிவித்தது.
அதே சமயம் வாடிக்கையாளர்கள் அந்த அறிக்கையையும் ரசீதையும் இணைய அகப்பக்கம் மற்றும் myTNB செயலியிலும் காண முடியும்.
இவ்வாரம் சனிக்கிழமை பஹாங், Chini சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்கள் இறுதி நேரம் வரை காத்திராமல் முன் கூட்டியே சென்று வாக்களிக்குமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
கூடல் இடைவெளியைப் பின்பற்றி, வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அட்டையில் வாக்களிக்கச் செல்லும் நேரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவ்விடைத் தேர்தலில் வாக்காளர்கள் காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் FINASசும் திரையரங்க உரிமையாளர்களும் RMCO காலக் கட்டத்தில் திரையரங்குகள் செயல்படத் தொடங்கிய இரு வாரங்களுக்குப் பிறகு SOPயை மறு ஆய்வு செய்யவுள்ளன.
Covid-19 காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நேற்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
பிற செய்திகள்.....
தேசியச் சின்னத்தை அவமதிக்கும் வகையில் சித்தரித்த புத்தகத்திற்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது.
-----
திரங்கானுவில் ஐந்து வயது சிறுமியை அடித்துத் துன்புறுத்தியதாக நம்பப்படும் அச்சிறுமியின் மாற்றான் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
-----
சிலாங்கூர், Rawangங்கில் Datuk Seri பட்டத்தைக் கொண்ட வர்த்தகர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு வணிகக் கடன் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல் துறை கூறியிருக்கிறது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather