Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

திருமண விழாவில் கொரோனாப் பரவல்!

Jul 02, 2020


நேற்று நாட்டில் ஒரேயொரு COVID-19 சம்பவம் மட்டுமே பதிவானது!

அதுவும் உள்நாட்டில் பரவியது அல்ல என சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் நாட்டில் 2ஆம் கட்டமாக COVID-19 சம்பவங்கள் பரவத் தொடங்கியதற்கு பிறகு, உள்நாட்டில் கொரோனாத் தொற்று சம்பவம் அறவே இல்லாதா நாளாகவும் அது அமைந்துள்ளது.

இந்நிலவரம் நீடிக்க மலேசியர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பார்கள் என தாம் நம்புவதாக, Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

"What’s more important for us is that maintain and sustain zero transmission for the next 28 days so if we can do that,im sure we can do that “I am sure we can achieve that together - if everyone adheres to the ministry’s SOP.”

தொடர்சியாக 4 வாரங்களுக்கு புதிய கொரொனா சம்பவங்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே, மலேசியா அப்பெருந்தொற்றில் இருந்து முழுமையாக விடுப்பட்ட நாடு என அறிவிக்க முடியும் என்றும் Dr Noor Hisham சொன்னார்.

நாட்டில் இன்னும் 144 பேர் கொரோனா கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிறப்பு கால அட்டவணை!

ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பிறகு, இம்மாத மத்தியில் பள்ளித் தவணை மீண்டும் தொடங்கும் போது, சுழல் முறையிலும், இரு நேர முறையை கொண்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு கால அட்டவணை தயாரிக்கப்படும்.

ஆசிரியர்கள் பணிச்சுமையை எதிர்நோக்காமல் இருக்க, அவர்களது வேலை நேரம் சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கவும் அனுமதிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்தது.

5ஆம், ஆறாம் வகுப்பு மற்றும் புகுமுக வகுப்பு தொடங்கி  கீழ்நிலை ஆறாம் படிவம் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 15ஆம் தேதி தொடங்கவுள்ளன.

ஒன்றாம் ஆண்டு முதல் 4 ஆம் ஆண்டு வரைக்குமான மாணவர்கள் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி பள்ளிக்கு திரும்புவார்கள் என அமைச்சு நேற்று அறிவித்தது.

மற்றொரு நிலவரத்தில், உயர்கல்விக் கழகங்களை திறப்பதற்கான உயர்கல்வி அமைச்சு முன்வைத்த SOP-களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதையடுத்து, உயர்கல்விக் கழகங்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சொந்தமாக உணவு கொண்டுச் செல்லலாம்!

இன்னும் இரு வாரங்களில் கட்டம் கட்டமாக அனைத்துப் பள்ளிகளும் திறக்கவுள்ள நிலையில், மாணவர்கள் வீட்டில் இருந்து சொந்தமாக உணவுகளை கொண்டுச் செல்லலாம் என கல்வி அமைச்சு கூறியது.

கட்டாயம் இல்லை என்றாலும், அவ்வாறு சொந்தமாக உணவுகளை கொண்டுச் செல்ல மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சர்  Dr Mohd Radzi Jidin தெரிவித்தார்.

பள்ளி சிற்றுண்டிச் சாலைகள் நிர்ணயிக்கப்பட்ட SOP-களை பின்பற்றி செயல்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.

"Sekiranya pelajar ke kantin untuk membeli makanan maka mereka perlu mematuhi penjarakkan sosial sebab itu kalau kita lihat di kantin kantin sekolah, dah ada tanda penjarakan social bagi memastikan sekiranya pelajar beratur di kantin maka adanya penjarakkan social dan tiada kesesakkan."

விளையாட்டு மற்றும் புறப்பாட நடவடிக்கைகளை நடத்தவும் இப்போதைக்கு அனுமதி இல்லை என்றாரவர்.

திருமண விழாவில் கொரோனாப் பரவல்!

இந்தியா பீகாரில் கொரோனா கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தும், திருமணம் செய்துக் கொண்ட ஆடவர், இரு நாட்களுக்குப் பிறகு உடல்நிலை மோசமாகி, உயிரிழந்தார்.

அவரது திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்ற நூற்றுக்கும் அதிகமானோருக்கு அக்கிருமித் தொற்று உறுதியாகியிருக்கின்றது.

Image: The Statesman

முன்னதாக, திருமணத்தன்று காய்ச்சல் அதிகமாக இருந்ததால், திருமணத்தை நிறுத்தச் சொல்லி மாப்பிள்ளை கேட்டும், குடும்பத்தார் அவரை கட்டாயப்படுத்தி அத்திருமணத்தை நடத்தி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பேரளவிலான கொரோனாப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொலை வழக்கு!

தமிழகம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை - மகன் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும், காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather