Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மின் கட்டணக் கழிவுச் சலுகை நீட்டிப்பு!

Jul 03, 2020


பிரதமர் பாராட்டு!

COVID-19 கோறனி நச்சில் தொற்றை முறியடிக்க தொடர்ந்து கடுமையாக உழைத்து வரும் முன்வரிசைப் பணியாளர்களை பிரதமர் பாராட்டியிருக்கின்றார்.

கொரோனாப் பரவலுக்கு எதிராக அரசாங்கம் விதித்த அனைத்து SOP-களையும் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் மக்களுக்கும் Tan Sri Muhyiddin Yassin நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆகக் கடைசி நிலவரப்படி, நாட்டில் அக்கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாக, அதாவது 85 பேர் என பதிவாகியுள்ளது.

நேற்று மூன்று புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவான வேளை,  62 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து திரும்பி, கொரோனா கிருமித் தொற்றுக்கான 2ஆவதுப் பரிசோதனையை இன்னும் செய்துக் கொள்ளாமல் இருப்பவர்களை உடனே முன்வருமாறு, PDRM வலியுறுத்தியுள்ளது.

அத்தகைய 620 பேர் குறித்த தகவல்களை தாங்கள் சுகாதார அமைச்சிடம் இருந்து பெற்றிருப்பதாக குற்றப் புலானாய்வுத் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனைக்கு வர முரண்டுப் பிடிப்போர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க தயாங்காது எனக் கூறிய அவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு கூடியப்பட்சம் ஈராண்டுகள் சிறை, அபராதம் அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம் என எச்சரித்தார்.

FOMCA கோரிக்கை!

வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகை, இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என மலேசிய பயனீட்டாளர் சங்க சம்மேளனம் FOMCA அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் வியாபாரிகள், அந்நிதிச் சுமையில் இருந்து மீண்டு வர அச்சலுகை உதவியாக இருக்கும் என தலைமை நடவடிக்கை அதிகாரி சரவணன் தம்பிராஜா தெரிவித்தார்.

நாட்டில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்தப் பிறகு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, சம்பளம் இல்லா விடுப்பு ஆகிய சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீண்டும் வேலைத் தேடி வருமானம் ஈட்டவும், இருக்கின்றன கடன்களை சமாளிக்கவும் போராடி வருவதால், அரசாங்கம் இச்சலுகையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 

வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகையை நீட்டிப்பது, அந்தந்த வங்கிகளின் விருப்பதிற்கு உட்பட்டது என அண்மையில்  நிதி அமைச்சு கூறியிருந்தது தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.
 

மின் கட்டணக் கழிவுச் சலுகை!

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட, வீடுகளுக்கான மின் கட்டணக் கழிவுச் சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கொரோனாப் பரவல் ஏற்படுத்திய மக்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் Bantuan Prihatin Elektrik உதவித் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அரசாங்கம் அச்ச்லுகையை வழங்கியிருந்தது.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather