← Back to list
முதல் முறையாக ஒரே ஒரு சம்பவம்!
Jul 01, 2020
நாட்டில் முதல் முறையாக Covid-19 தொடர்பில் ஒரு புதிய சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் முதல் முறையாக உள்நாட்டினரை உட்படுத்திய சம்பவம் இல்லை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் 21 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
புதிதாக மரணம் ஏதும் பதிவாகாததால் மொத்த மரண எண்ணிக்கை 121 ஆகவே இருக்கிறது.
"Malahan kes harian Covid-19 di kalangan rakyat Malaysia didapati sejajar dengan unjuran kes harian dalam permodelan dan ramalan pada 21 Mei 2020 oleh Institut Kesihatan Negara, Kementerian Kesihatan Malaysia"
நாடு முழுவதும் தேர்வுக்கு அமராத பிற மாணவர்களுக்கு பள்ளிகள் கட்டங் கட்டமாகத் திறக்கப்படவுள்ளன.
அவ்வகையில் புகுமுக வகுப்பு, ஒன்றாம் படிவம் முதல் நான்காம் படிவம் வரை பயிலும் மாணவர்களுக்கும் Lower Six எனப்படும் ஆறாம் படிவத்தின் முதல் பருவத்தில் பயிலும் மாணவர்களுக்கும் இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி பள்ளிகள் திறக்கப்படும்.
ஆரம்பப் பள்ளிகளில் ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களும் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி பள்ளிகளுக்குச் செல்வர்.
ஒன்று முதல் நான்காம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 22 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
கல்வியமைச்சு அத்தகவலை அறிவித்தது.
இவ்வேளையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும், தங்களுக்கு ஏதுவான செயல்பாட்டு நடைமுறைத் தேர்தெடுக்க பள்ளிகளுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது.
கல்வியமைச்சு மூன்று வகையான செயல்பாட்டு நடைமுறையைப் பரிந்துரைத்திருப்பதாக அமைச்சர் Dr Mohd Radzi Md Jidin தெரிவித்தார்.
தங்களின் பிள்ளைகளின் பள்ளி நேரம் குறித்த விவரங்களைப் பெற்றோர் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து பெற வேண்டும் என அவர் சொன்னார்.
இவ்வேளையில் பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைகள், விளையாட்டு ஆகியவற்றுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்றாரவர்.
மற்றொரு நிலவரத்தில், கல்வியமைச்சின் கீழ் பதிந்து கொண்டுள்ள tuition மையங்களும் மொழி கற்பித்தல் மையங்களும் இம்மாதம் 15 ஆம் தேதியில் இருந்து திறக்கப்படலாம் என அமைச்சர் கூறினார்.
பொது உயர்க்கல்வி கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான தேதி குறித்த விவரங்களை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும்.
உயர்க்கல்வி அமைச்சு அதனை அறிவிக்கும் என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yasin இம்மாத இறுதியில் Covid-19 விழிப்புணர்வு மீதான இயக்கத்தைத் தொடக்கி வைக்கவிருக்கிறார்.
அதனை முன்னிட்டு, Covid-19 தொடர்புடைய சின்னம் மற்றும் வாசகம் உருவாக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்றும் தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaacob கூறினார்.
"Pertandingan ini dibuka 1 julai hingga 10 julai sebelum 12 tengah malam, semua rakyat Malaysia layak menyertai pertandingan ini"
அப்போட்டியில் கலந்து கொள்வது தொடர்பான விவரங்களைப் பொதுமக்கள் தொடர்பு, பல்லூடக அமைச்சின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் காணலாம்.
இன்று நாட்டில் மேலும் அதிகமான துறைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சும் நிர்ணயித்துள்ள வழிகாட்டி முறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருமாறு மாமன்னர் ஆலோசனை கூறியிருக்கிறார்.
Covid-19 பரவலைத் தடுக்க பொதுமக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு புதிய வழமைகளையும் கடைப்பிடித்து வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பாலர் பள்ளிகள், மழலையர் பள்ளிகள், சுற்றுலாத் துணைத் துறைகள் உள்ளிட்ட மேலும் அதிகமான சமூக மற்றும் பொருளாதாரத் துறைகள் இன்று முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.
பிற செய்திகள்….
தனியார் வாகனங்களில் சிறார்களுக்கான சிறப்பு இருக்கைகளைக் கொண்டிராத வாகனமோட்டிகளுக்கு சம்மன்கள் வெளியிடுவதும் அபராதம் விதிப்பதும் ஒத்தி வைக்கப்படுகிறது.
Covid-19 பரவல் காரணமாகவும் பொதுமக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள கால அவகாசம் வழங்கவும் அவ்வாறு செய்யப்படுவதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.
-----
வரும் சனிக்கிழமை நடைபெறும் பஹாங், Chini சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலையொட்டி 600க்கும் அதிகமான காவல் வீரர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
Covid-19 பரவலுக்கு மத்தியில் அத்தேர்தல் நடைபெறுவதால், உரிய SOPயைப் பின்பற்றி கடமையாற்ற அவர்களுக்குப் போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் PDRM கூறியது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather