← Back to list
வருமான வரி பாரங்களை அனுப்ப இன்று தான் கடைசி நாள்!
Jun 30, 2020
வருமான வரி பாரங்களை அனுப்ப இன்று தான் கடைசி நாள்!
வழக்கமாக, ஏப்ரல் 30 மற்றும் மே 15ஆம் தேதிகள் தான், வருமான வரியை அறிவிப்பதற்கான கடைசி நாட்களாக இருக்கும்.
ஆனால், இவ்வாண்டு கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, நடமாட்டக்க் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டதால், அக்கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக, வருவாய் துறை அறிவித்தது.
தாமதிக்கும் பட்சத்தில், இன்றைய தேதிக்குப் பிறகான பாக்கி வரித் தொகையில் 10 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும்.
ஒருவேளை, வருமான வரியும், அந்த அபராதமும் 60 நாட்களுக்குள் செலுத்தப்படவில்லை என்றால், பாக்கி வரியில் மேலும் 5 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும்.
அதிக நேரம் செலவிட முடியாது!
திருமணம் உள்ளிட்ட இதர விருந்துபசரிப்புகளில் கலந்துக் கொள்வோர், விருந்து முடிந்ததப் பின்னரும் அங்கேயே நேரம் செலவிட அனுமதி இல்லை!
அந்நிக்ழ்வுகளில் விருந்தினர்கள், கூடல் இடைவெளியைப் பின்பற்றி அமர வேண்டும்; அதே சமயம், buffet வகையில் உணவுகள் பறிமாறப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கி, பெரிய அளவிலான சமூக நிகழ்வுகளை நடத்த அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.
ஆயினும், அந்நிகழ்வுகள் 5 மணி நேரங்களுக்கும் மேல் நடைபெறக்கூடாது என்பதோடு, மொத்தமாக 250 பேர் மட்டுமே அதில் கலந்துக் கொள்ள முடியும்.
கம்போடியா சென்றவருக்கு கிருமித் தொற்று!
மலேசியாவில் இருந்து கம்போடியாவுக்கு திரும்பிய இருவருக்கு COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டு வருவதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
அந்த இருவரில் ஒருவர், மலேசியாவில் சிகிச்சைப் பெற்று, அக்கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்த முன்னாள் COVID-19 நோயாளி என்றும் Dr Noor Hisham சொன்னார்.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில், கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள வேளை, மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், மூவாயிரத்து 949 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இதுவரை பதிவான மொத்த சம்பவங்கள் எண்ணிக்கை 54 ஆயிரம் என தகவல் கூறுகின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather