← Back to list
கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காக்கள் செயல்படத் தொடங்குகின்றன!
Jun 29, 2020
கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டதும், நிர்ணயிக்கப்பட்ட SOPக்கள் பின்பற்றப்பட வேண்டும்!
சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் Datuk Seri Noor Hisham Abdullah அவ்வாறு வலியுறுத்தினார்.
கேளைக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காக்கள் வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி செயல்படும்.
______
நாட்டில் இன்று மேலும் மூன்று புதிய Covid-19 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
அவை மூன்றும் முறையே வெளிநாட்டிலிருந்து வந்தவரையும், சிலாங்கூர் மற்றும் சபாவையும் சேர்ந்தவர்களை உட்படுத்தியதாகும் என சுகாதார தலைமை இயக்குனர் இன்று தெரிவித்தார்.
16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
_______
நாட்டிலுள்ள எல்லா மருத்துவமனைகளின் மின்கம்பி இணைப்பும் பரிசோதைக்கப்படும்!
அதற்காக சுகாதார அமைச்சு குறிப்பிட்ட தொகைகையும் ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் Datuk Seri Dr Adham Baba தெரிவித்துள்ளார்.
ஜொகூர், Sultana Aminah மருத்துவமனையில் ஏற்பட்டது போன்ற தீச்சம்பவம் இனி எந்த மருத்துவமனையில் ஏற்படதிருப்பதை உறுதிச் செய்யவே இது என அவர் விளக்கினார்.
இதனிடையே அம்மருத்துவமனையில் உடனடியாக பழுது பார்க்கும் வேலைகளுக்கு முழு செலவீனங்களையும் ஏற்றுக் கொண்ட ஜொகூர் சுல்தானுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
_______
நாளை நடைபெறவுள்ள Pahang Chini சட்டமன்றத் தொகுதி இடைதேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பில் சுமார் 18 காவலதிகாரிகள் வாக்களிக்கவிருக்கின்றனர்.
வாக்களிப்பு காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், வாக்களிப்பு மைய்யம் காலை 8 முதல் நன்பகல் 12 வரை திறந்திருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Chiniயில் வருகின்ற ஜூலை 4ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது.
_______
சபாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இருவர் குறைந்து அத்ற்போது 1209 ஆகக் உள்ளது.
ஜொகூரில் 116 பேர் தற்காலிக துயர் துடைப்பு மைய்யங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
_______
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather