← Back to list
EPF தொகையை எடுக்கும் வயது வரம்பு 55!
Jun 28, 2020
EPF சந்தாதாரர்கள் தங்களது முழு ஊழியர் சேமநிதியையும் எடுக்கும் வயது வரம்பு 55ஆக நிலை நிறுத்தப்படுகின்றது.
அதன் வயது வரம்பை 65ஆக உயர்த்த எந்த திட்டமோ, கலந்துரையாடகோ இல்லை என KWSP தெளிவுபடுத்தியது.
EPF தொகையை எடுக்கும் வயதை 55லிருந்து 65ஆக மாற்ற முன்னதாக உலக வங்கி முன்மொழிந்திருந்ததை அடுத்து அவ்வாரியம் அவ்வாறு தெளிவுபடுத்தியது
_____
சிலாங்கூரில் 55 வயது வணிகர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக காவல் துறை எழுவரைக் கைது செய்யுள்ளது!
அவ்வனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட 55 வயது ஆடவர் கடந்த 10ஆம் தேதி Sri Damansaraவில் கடத்தப்பட்டார்.
அவரது சடலம் நேற்று காலை Rawangகில் கண்டெடுக்கப்பட்டது.
_____
Covid-19 காரணமாக இவ்வாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் சுற்றுலா மற்றும் கலை கலாச்சார துறை சுமார் 45 பில்லியன் ரிங்கிட் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
நாட்டில் Covid-19நால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றான அது, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப சற்று கூடுதல் காலம் தேவைப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
_______
சிங்கப்பூரில் வருகின்ற 10ஆம் தேதி நடக்கவுள்ள பொது தேர்தல், மலேசியாவுக்கிடையிலான அந்நாட்டின் எல்லையைத் திறக்கும் நடவடிக்கையைத் தாமதப் படுத்தாது என வெளியுறவு அமைச்சு நம்புகின்றது.
எல்லை திறப்பு மிக கவனத்துடன் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவ்வமைச்சு, இரு நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றது.
_______
சிலாங்கூர், Ampangகில் உள்நாட்டவர் உள்ளிட்ட 14 பேரை உட்படுத்திய Malaria நோய்ச் சம்பவத்திற்கு அந்நிய தொழிலாளி ஒருவர் தான் காரணம் என்பதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அந்நிய தொழிலாளிக்கு அத்தொற்று அவரது சொந்த நாட்டிலேயே பீடித்துவிட்டது தெரிய வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather