← Back to list
ஊக்கமளிக்கும் முன்னேற்றம்!
Jun 26, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஓர் இலக்க எண்ணாகவே இருக்கிறது.
புதிதாக 6 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் 23 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இதுவரை நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 294 ஆக அதிகரித்துள்ளது.
மரண எண்ணிக்கையில் மாற்றமில்லை.
மொத்த மரண எண்ணிக்கை 121 ஆகும்.
இன்னும் 191 பேர் மட்டுமே அக்கிருமித் தொற்றுக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, Covid-19னுக்கு எதிரான போராட்டத்தை மலேசியா சிறப்பாகக் கையாண்டு வருவதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
சிறப்புக் கல்வி மையங்கள், tuition மையங்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதியளிக்கிறது.
தேதி, SOP உள்ளிட்ட மேல் விவரங்களை கல்வியமைச்சு அறிவிக்கும்.
காலைச் சந்தை மற்றும் இரவுச் சந்தை வணிகர்கள் அவசியம் சுவாசக் கவசங்களை அணிய வேண்டும் என தற்காப்பு அமைச்சு நினைவுறுத்தியுள்ளது.
அவ்விதிமுறை உட்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள பிற தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றாத வணிகர்களின் லைசன்ஸ் அனுமதி மீட்டுக் கொள்ளப்படும் என அது எச்சரித்தது.
நிர்ணயிக்கப்பட்ட SOPயைப் பின்பற்றி சரும ஆரோக்கியம், பாதுகாப்பு மையங்கள், பாத அழுத்தச் சேவை மையங்கள் ஆகியவற்றை ஜூலை முதல் தேதியில் இருந்து மீண்டும் திறக்கலாம்.
அதே சமயம், கூட்டங்கள், பயண மற்றும் சுற்றுலா கண்காட்சிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட சில சுற்றுலாத் துணைத் துறைகளும் மீண்டும் செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
மற்றொரு நிலவரத்தில், ஆடைகள் விற்கும் வணிகத் தளங்களில் அவற்றை அணிந்து பார்ப்பதற்கான அறைகளைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது.
நாளை தொடங்கி RON95 மற்றும் RON97 பெட்ரோல் விலை 10 சென் உயர்கிறது.
அவ்வகையில் RON95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 69 சென்னுக்கும் RON97 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கும் விற்கப்படும்.
டீசல் 9 சென் அதிகரித்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 86 சென்னாகிறது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather