← Back to list
மேலும் 40 பேர் பூரண நலமடைந்துள்ளனர்!
Jun 25, 2020
நாட்டில் மேலும் 40 பேர் Covid-19னில் இருந்து விடுபட்டு பூரண நலமடைந்துள்ளனர்.
புதிதாக 4 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.
ஆயினும் 208 பேர் மட்டுமே இன்னமும் அக்கிருமித் தொற்றுக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரண எண்ணிக்கையில் மாற்றமில்லை.
அவ்வெண்ணிக்கை 121 ஆகவே உள்ளது.
சிலாங்கூர், Hulu Langatட்டில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள cluster சம்பவத்திற்கு ஒருவர் மற்றொருவர் வீட்டுக்கு வருகையளித்ததே காரணம்.
Covid-19 தொற்றியிருந்த சமயப் பள்ளி மாணவர், வேறொரு வீட்டில் தங்கியிருந்த உறவினர் வீட்டுக்குச் சென்றதால், அந்த உறவினருக்கும் அவரது சக ஊழியருக்கும் அக்கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதன் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியது.
கல்வியமைச்சு பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்திருப்பது மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எதிர்மறைத் தாக்கங்களைக் கொண்டு வரலாம்.
தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆண்டு இறுதிகளில் சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்படுவதை NUTP சுட்டிக் காட்டியது.
வெள்ளம் உள்ளிட்ட நிலவரங்களைக் கருத்தில் கொண்டுதான் பள்ளி அட்டவணை இதுவரை இருந்து வந்ததாகவும் அது குறிப்பிட்டது.
MySejahtera செயலி ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அம்மாதத்தில் Covid-19 பீடித்த 200க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டனர்.
அக்கிருமித் தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியதில் இருந்து அவ்வெண்ணிக்கையும் குறைய ஆரம்பித்ததாக தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.
அதே சமயம் Covid-19 பரவல் யாருக்கேனும் இருந்தால், அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண ஏதுவாக ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான வணிகத் தளங்கள் அச்செயலியைப் பயன்படுத்துகின்றன.
இதனிடையே MySejahtera செயலி வாயிலாக இதுவரை 49 லட்சம் பேர் தங்களைப் பதிந்து கொண்டிருப்பதாகவும் அது கூறியது.
மலேசிய-சிங்கப்பூர் எல்லைகளை மீண்டும் திறந்து விடுவது மீதான கலந்துரையாடலில் நடப்பில் உள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOP கருத்தில் கொள்ளப்படும்.
வெளியுறவு அமைச்சு அதனைத் தெரிவித்திருக்கிறது.
சிலாங்கூரில் உள்ள Bukit Broga மலையேறும் பகுதியை வரும் சனிக்கிழமையில் இருந்து பின்னர் அறிவிக்கப்படும் தேதி வரை மூட சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட SOP பின்பற்றப்படாததே அதற்குக் காரணம்.
மலாக்காவில் சிகை திருத்தும் கடையொன்றை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOPயின் கீழ் அக்கடையில் வேலை செய்து வந்த நான்கு அந்நிய நாட்டவர்களுக்கு Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை.
பிற செய்திகள்.....
ஜொகூரில் இன்று மாலை வரை மூன்று மாவட்டங்களில் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை 426க்குக் குறைந்துள்ளது.
அம்மாநிலத்தில் வெள்ளம் சீரடைந்து வருகிறது.
-----
சிலாங்கூர், கிள்ளானில் சாலையில் எதிர்த்திசையில் லாரியை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்காட்சிகள் அடங்கிய காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-----
கெடா, Kulimமில் ஆள் கடத்தலுக்கு ஆளாகவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 28 அந்நிய ஆடவர்களைக் காவல் துறை காப்பாற்றியது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather