← Back to list
COVID-19: புதிய cluster சம்பவங்கள்!
Jun 25, 2020
நாட்டில் புதிதாக 3 Cluster சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை, சிலாங்கூர் Hulu Langat, KL Bukit Bintang மற்றும் Sarawak Kuching ஆகியப் பகுதிகளை உட்படுத்தியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
இருந்த போதிலும், அந்த மூன்றுப் பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தீவிரப்படுத்துவதற்கான தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் நாட்டில் நேற்று 6 புதிய கொரோனா சம்பவங்கள் மட்டுமே பதிவான வேளை, அத்தொற்றில் இருந்து 45 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து, மொத்தமாக இதுவரை எட்டாயிரத்து 231 பேர் அத்தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர்.
இன்னும் 244 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை!
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு சுவாசக் கவசம் அணிய வேண்டும் என கல்வி அமைச்சு கூறுகின்றது.
நாள்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பள்ளியில் இருக்கும் நேரம் முழுவதும் சுவாசக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு வரும் போது, இயன்ற வரை சொந்த hand sanitizer-ரை கொண்டு வர மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதனிடையே, பள்ளி மாணவர்களை பேருந்து மற்றும் வேன்களில் ஏற்றும் முன்னர், ஓட்டுநர்கள் COVID-19 கிருமித் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வாகனத்தில் இருக்கும்போது எப்போதும் அமர்ந்திருக்கவும், சுவாசக் கவசங்களை அணியவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைக் குறைக்கவும் கூறி, ஓட்டுநர்கள் மாணவர்களுக்கு குரல் பதிவுகள் மூலம் அவ்வப்போது நினைவூட்டல்களைக் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பள்ளி பேருந்து சேவை நேரம் முடிந்ததும், அவ்வாகனங்கள் சரியான முறையில் சுத்தம் செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு SOP வெளியிட்டுள்ளது.
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று!
மெக்சிக்கோவில், கொரோனா கிருமித் தொற்று இல்லாத பெற்றோருக்கு, ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு COVID-19 கிருமித் தொற்று பீடித்துள்ளது.
அக்குழந்தைகளுக்கு எவ்வாறு அக்கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கும் என்பது தொடர்பில் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் 2 குழந்தைகள் உடல் நலத்துடன் உள்ள வேளை, மூன்றாவது குழந்தை pneumonia-வால் பாதிக்கப்பட்டுள்ளது; எனினும், அதன் உடல் நிலை சீராக இருக்கின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather