← Back to list
பள்ளி அட்டவணையில் மாற்றம்!
Jun 23, 2020
பள்ளி மாணவர்களுக்கான மத்தியத் தவணை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் ஆகஸ்ட் மாதம் வழக்கமாகக் கொடுக்கப்படும் 9 நாட்கள் விடுமுறை 5 நாட்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
A குழுவில் உள்ள ஜொகூர், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் பள்ளி ஆண்டு இறுதி விடுமுறை 42 நாட்களில் இருந்து 14 நாட்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
B குழுவில் இடம் பெற்றுள்ள மலாக்கா, நெகிரி செம்பிலான், பஹாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சிலாங்கூர், KL, Putrajaya, Labuan, சபா, சரவாக் ஆகியவற்றில் ஆண்டு இறுதி விடுமுறை 41 நாட்களில் இருந்து 13 நாட்களுக்குக் குறைக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கான கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளைப் பள்ளிகள் திட்டமிட ஏதுவாக அம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அது விளக்கியது.
நாளை மீண்டும் திறக்கப்படவிருக்கும் பள்ளிகள் சில அம்சங்களை மாற்றியமைக்கத் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவை தேசிய பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சும் நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPயை மீறாமல் இருக்க வேண்டும் என கல்வியமைச்சு நினைவுறுத்தியது.
நாளை முதல் அனைத்து இடைநிலைப் பள்ளிகளிலும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
நாளை முக்கியத் தேர்வுகளுக்கு அமரும் 5 மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அட்டவணையிடப்பட்டது போல் ஜூலை முதல் தேதியில் இருந்து மழலையர் மற்றும் பாலர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தற்போது அதிகமான பெற்றோர் வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டனர்.
சிறு பிள்ளைகளைக் கொண்டுள்ள பெற்றோர் அவர்களை மழலையர் அல்லது பாலர் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டியிருப்பதாக அமைச்சு சுட்டிக் காட்டியது.
மழலையர் அல்லது பாலர் பள்ளிகள் ஏதேனும் பிரச்னையை எதிர்நோக்கியிருந்தால், அதனைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தின் SOPயை முழுமையாகப் பின்பற்றுவதில் சில பள்ளிகள் சிரமத்தை எதிர்நோக்கலாம் எனக் கூறி மழலையர் மற்றும் பாலர் பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஒத்தி வைக்குமாறு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கேட்டுக் கொண்டதை அடுத்து அமைச்சு அவ்வாறு கூறியது.
நாட்டில் மேலும் 9 பேர் Covid-19னில் இருந்து விடுபட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனை அடுத்து இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 590 பேராக அதிகரித்துள்ளது.
புதிதாக மூன்று சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
மரண எண்ணிக்கை 121 ஆகவே உள்ளது.
சரவாக், கூச்சிங்கில் அடையாளம் காணப்பட்ட தேவாலய மாநாட்டு cluster சம்பவம் முடிவுக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
அந்த clusterரில் கடந்த 48 நாட்களில் புதிய சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.
தேசிய பரிவுமிக்க உதவித் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு நாளை முதல் உதவிநிதி வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே அங்கீகரிக்கப்பட்ட Mikro சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கான மூவாயிரம் ரிங்கிட் சிறப்பு geran உதவிநிதி இம்மாதம் 29 ஆம் தேதி தொடங்கி கொடுக்கப்படும்.
பிற செய்திகள்......
ஜொகூரில் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை 731 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காலையில் இருந்த எண்ணிக்கையை விட அது சற்று அதிகமாகும்.
சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கருத்து ஒன்றின் தொடர்பில் Segambut நாடாளுமன்ற உறுப்பினர் Hannah Yeohவிடம் இருந்து காவல் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
சிங்கப்பூரில் அந்நாட்டு அதிபர் பொதுத் தேர்தல் நடத்த ஏதுவாக நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.
பொதுத் தேர்தல் ஜூலை பத்தாம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather